தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பண்டிகை காலத்தில் அவிநாசி நகருக்குள் பேருந்துகளை இயக்க சிபிஎம் கோரிக்கை

6 Nov 2026, 12:53 am
பண்டிகை காலத்தில் அவிநாசி நகருக்குள் பேருந்துகளை இயக்க சிபிஎம் கோரிக்கை

பண்டிகை காலத்தில் அவிநாசி நகருக்குள் பேருந்துகளை இயக்க சிபிஎம் கோரிக்கை

அவிநாசி, நவ.5–தீபாவளியையொட்டிய விடுமுறை காலத்தில், அவிநாசி வழியாக செல்லும் வெளியூர் பேருந்துகளை அவிநாசி நகர பகுதிக்குள் இயக்கி, பயணிகளின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அவிநாசி வழியாகச் செல்லும் பேருந்துகள், அவிநாசி புறவழிச்சாலையில் உள்ள கிருஷ்ணா பேக்கரி அருகே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து அவிநாசிக்கு வரும் பயணிகள் நகர பகுதிக்குள் செல்வதற்கும், அவிநாசியில் இருந்து தங்களது ஊர்களுக்கு செல்வதற்கும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

குறிப்பாக, பகல் நேரங்களில் கிருஷ்ணா பேக்கரி அருகே இறக்கிவிடப்படும் பயணிகள், அவிநாசி நகருக்குள்வருவதற்கு ஆட்டோக்களை நாட வேண்டிய நிலை உள்ளது. இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அதேபோல், அவிநாசியில் இருந்துவெளியூர் செல்லும் பயணிகள் அவிநாசிலிங்கம்பாளையம் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று பேருந்து ஏற வேண்டிய சூழல் நிலவுகிறது.இரவு நேரங்களில் நிலைமை மேலும் சிரமமாக உள்ளது. புறவழிச்சாலையில் இறக்கிவிடப்படும் பயணிகள் நகருக்குள் வருவதற்கு போதிய பேருந்து வசதியோ, மாற்று வாகன வசதியோ இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வரும் பயணிகளின்எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது.

எனவே, பண்டிகை காலம் முழுவதும் சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவிநாசி வழியாகஇயக்கப்படும் பேருந்துகளை அவிநாசி நகரப் பேருந்து நிலையம் வரை இயக்கவும், இரவு நேரங்களிலும் பயணிகள் எளிதாகச் செல்வதற்கு உரிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.