மழைக்காலங்களில் அவதிப்படும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
8 Jun 2026, 1:05 am
<p><strong>மழைக்காலங்களில் அவதிப்படும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்</strong></p><p>நாமக்கல், ஜூன் 7- நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டம், எலச்சிபாளை யம் ஒன்றியத்திற்குட்பட்ட இலுப் பிலி கிராமம் குளத்து வளவு பகுதி யில் வசித்து வரும் 30-க்கும் மேற் பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இலுப்பிலி கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி சமீபத்தில் தூர்வாரப்பட்டு ஆழப்ப டுத்தப்பட்டது. இதன் காரணமாக ஏரிக்கரையோரத்தில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழைக் காலங்களில் நீர் புகுந்து, அவர்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. ஒவ்வொரு மழைக் காலத்திலும் மக்கள் கடும் சிரமங் களை எதிர்கொண்டு வருகின்ற னர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி கடந்த ஐந்து மாதங் களுக்கு முன்பு கிராம நிர்வாக அலு வலகம் முன்பும், பாதிக்கப்பட்ட பகுதியிலும் பல்வேறு வடிவங்க ளில் போராட்டங்கள் நடைபெற் றன. அதனைத் தொடர்ந்து திருச் செங்கோடு வருவாய் கோட்டாட்சி யர் லெனின் மற்றும் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப் பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தனர். இதற்கிடையில் சட்டமன்றத் தேர்தல் காரணமாக நடவடிக்கை கள் தாமதமானதாக கூறப்படுகி றது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் தலை மையில் சனியன்று திருச்செங் கோடு வட்டாட்சியர் மதியழகனை சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு விரைவில் மாற்று இடம் வழங்க வலியுறுத்தினர். அப்போது, மாற்று இடம் வழங்குவதற்கான நில அளவீடு உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மீத முள்ள சில நடைமுறைகள் முடிந்த வுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்றும் வட்டாட்சியர் உறுதியளித் தார். இந்நிகழ்வில், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் லட்சுமி, மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.சக்திவேல் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
