முந்தய பக்கம்

ஏழு கிணறு பகுதி வாழ்விடப் பொருட்கள் அகற்றம்

12 Dec 2025, 3:12 pm
ஏழு கிணறு பகுதி வாழ்விடப் பொருட்கள் அகற்றம்
<p>சென்னை, டிச. 12 - சென்னை துறைமு கம் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட ஏழு கிணறு பகுதி யில் தெருவோரத்தில் வசித்து வந்த மக்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அவர்களின் வாழ்விடப் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) கண்டனம் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு இதுவரை மாற்று குடியிருப்பு குறித்து எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், வெள்ளிக் &nbsp;கிழமை (டிச. 12) சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா மற்றும் கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தனர். பின்னர், அவர்கள் 55-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தாஹா நவீனை நேரில் சந்தித்து, வாழ்விடப் பொருட்களை இழந்த மக்களுக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்குப் பதிலளித்த கவுன்சிலர் தாஹா நவீன், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரு மான பி.கே. சேகர்பாபுவிடம் ஆலோசித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த வலியுறுத்த லால் அப்பகுதி மக்களின் அடிப்படைப் &nbsp;பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram