தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாழைக்கன்றுகளை சேதப்படுத்தும் பன்றிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை

18 Jan 2026, 4:50 pm
வாழைக்கன்றுகளை சேதப்படுத்தும் பன்றிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை
<p><strong>வாழைக்கன்றுகளை சேதப்படுத்தும் பன்றிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை</strong></p> <p>சிவகங்கை, ஜன.18- சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் வாழைக்கன்றுகளை பன்றிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருவதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், பன்றிகளை கட்டுப் &nbsp;படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்புவனம் ஒன் றியச் செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பாச்சேத்தி பகுதியில் வாழை, &nbsp;கரும்பு, தென்னை, நெல் உள்ளிட்ட விவ சாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படு கிறது. குறிப்பாக முகூர்த்த நாட்களை கணக்கிட்டு பயிரிடப்பட்டிருந்த வாழைக் கன்றுகளை பன்றிகள் கூட்டமாக வந்து நாசம் செய்துள்ளதால், விவசாயிகள் கடும் &nbsp;பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அவர் தெரி வித்துள்ளார். வாழைத்தார் அறுவடை செய்யப்பட்ட பின்னரும், பக்கக் கன்றுகள் மூலம் தொட ர்ந்து மூன்று மாதங்கள் வரை வாழை இலை &nbsp;அறுவடை செய்ய முடியும். இதனால் திருப் &nbsp;பாச்சேத்தி பகுதியில் நாட்டு வாழை மற்றும் &nbsp;ஒட்டு வாழை அதிகளவில் பயிரிடப்படு கிறது. நடவு செய்த 10-வது மாதத்திலிருந்து &nbsp;பக்கக் கன்றுகள் மூலம் மூன்று மாதங்கள் வரை வாழை இலை அறுவடை நடைபெறு வது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பாச்சேத்தி பகுதியில் பன்றி கள் கூட்டமாக வந்து வாழை மற்றும் கரும்பு &nbsp;பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவ சாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரு வதாக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். பன்றி களால் ஏற்படும் சேதத்திற்கு இதுவரை எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றும், பன்றிகளை ஒழிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் &nbsp;அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வனத்துறை உடனடியாக தலை யிட்டு பன்றிகளை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக் &nbsp;கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு &nbsp;வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியு றுத்தப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.