தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவொற்றியூரில் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சி தகராறில் ஈடுபட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக சிபிஎம் வடசென்னை மாவட்டக்குழு கோரிக்கை

18 Jul 2026, 12:07 am
திருவொற்றியூரில் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சி தகராறில் ஈடுபட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக சிபிஎம் வடசென்னை மாவட்டக்குழு கோரிக்கை
<p><strong>திருவொற்றியூரில் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சி தகராறில் ஈடுபட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக சிபிஎம் வடசென்னை மாவட்டக்குழு கோரிக்கை</strong></p><p>சென்னை, ஜூலை 17- திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டவர்கள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: திருவொற்றியூர் தாங்கல் 2ஆவது தெருவில் பல ஆண்டுகளாக அலி (42) என்பவர் சென்னை மாநகராட்சி உரிமத்துடன் மாட்டிறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கொருக்குபேட்டையை சேர்ந்த சூர்யா, சிவாஜி உள்ளிட்ட 4 பேர் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காவல் துறையினருடன் அலி கடைக்கு வந்து மாடு வெட்டக் கூடாது, இவை அனைத்தும் திருடப்பட்ட மாடுகள் எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடை உரிமையாளர் மாடு வாங்கியதற்கான ஆதாரம் இருப்பதாக தெரி வித்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல், வந்த மதவெறி பிடித்த நபர்கள் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் தகாத வார்த்தைகளை பேசியுள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் சம்பந்தப்பட்ட நபர்களை தடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது ஏற்புடையதல்ல. இந்த நபர்கள் சில மாதங்களுக்கு முன்பு கார்கில் நகர் பகுதியில் இதேபோல் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். வேறு பகுதியில் இருந்து திருவொற்றியூர் பகுதிக்குள் வந்து திட்டமிட்டு மதக்கல வரத்தை தூண்டும் வகையில் இவர்களின் நடவடிக்கைகள் உள்ளன. எனவே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி மிரட்டல் விடுத்த மதவெறி சக்திகள் (அந்த நபர்கள்) மீதும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீதும் அரசு துறை ரீதியாக, சட்ட ரீதி யாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.