புற்றுநோய், இதய நோய்கள் மருந்துகளுடன் கியூபா புறப்பட்டது சிபிஎம் பிரதிநிதிகள் குழு
9 Aug 2026, 8:45 pm

புற்றுநோய், இதய நோய்கள் மருந்துகளுடன் கியூபா புறப்பட்டது சிபிஎம் பிரதிநிதிகள் குழு

புதுதில்லி, ஆக 9-அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சட்டவிரோதமான பொருளாதாரத் தடையால் சோசலிச கியூபாவில் பெரும் மனிதாபிமானத் துயரம் ஏற்பட்டுள் ளது. இதனால் கியூப மக்களுக்குத் தோள் கொடுக்கும்வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழு ஆகஸ்ட் 9 அதிகாலை கியூபாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. கட்சியின் அரசியல் தலைமைக்குழுஉறுப்பினர் விஜூ கிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி டீச்சர், கர்நாடக மாநிலச் செயற்குழு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம், சத்தீஸ்கர் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் மகாபத்ரா, கேரள மாநிலக் குழு உறுப்பினர் என்.

சந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பி.வெங்கட், சிஐடியு மத்தியக் குழு உறுப்பினர் அனில் எஸ்.எஸ். ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்த குழு, நாடுமுழுவதும் திரட்டப்பட்ட புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பிற உயிர்காக்கும் நோய்க ளுக்கான பல பெட்டி மருந்துகளை ஏந்தி கியூபாவிற்குப் புறப்பட்டது.

ஆகஸ்ட் 10 முதல் 13 வரை நடைபெறவுள்ள பிடல்காஸ்ட்ரோ நூற்றாண்டு மாநாட்டில் இப்பிரதிநிதிகள் குழு மார்க்சிஸ்ட் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும்.தொடர்ந்து பிரநிதிகள் குழு இதய நோய் மருத்துவமனை மற்றும் குழந்தை நலபுற்றுநோய் மருத்துவமனை, தொழிலாளர்-விவசாயி கூட்டுறவுச் சங்கங்கள், நலிவடைந்தோருக்கான சமூகநலத் திட்டம், பிடல் காஸ்ட்ரோ மையம், சே குவேரா மையம் மற்றும் கியூபா புரட்சியுடன் தொடர்புடையவரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடுவார்கள். இப்பிரதி நிதிகள் குழு ஆகஸ்ட் 19 அன்று நாடு திரும்பும்என்பது குறிப்பிடத்தக்கது.