தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு வங்கம்: சிபிஎம் தூதுக்குழு மீது தாக்குதல் - முகமது சலீம் கண்டனம்!

7 hours before
மேற்கு வங்கம்: சிபிஎம் தூதுக்குழு மீது தாக்குதல் - முகமது சலீம் கண்டனம்!

மேற்கு வங்கத்தில், வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சூழலை அம்மாநில பாஜக அரசு ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டிய சிபிஎம் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம், கட்சியின் தூதுக்குழுவினர் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள சிதல்குச்சி பிளாக்கில், கடந்த வாரம் பசு குண்டர்களால் கொலை செய்யப்பட்ட சிபிஎம் நிர்வாகி மொன்டு மியாவின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் மீனாட்சி முகர்ஜி தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று சந்திக்க சென்றபோது, அவர்கள் வந்த வாகனத்தின் மீது முட்டையை வீசி போலீசார் கண்முன்னே பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதல் நடந்தபோது மீனாட்சியுடன் கூச் பெஹார் மாவட்டச் செயலாளர் அனந்த ராய் மற்றும் முன்னாள் எம்.பி அலோகேஷ் தாஸ் ஆகியோர் உடனிருந்தனர். உள்ளூர் கட்சித் தொண்டர்களுடன் இணைந்து டிஎஸ்பி (DSP) அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனாட்சி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பின்னரே, அத்துமீறியவர்களைக் கைது செய்ய போலீசார் முன்வந்தனர்.

இதை தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள முசாஃபர் அகமது பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம், மேற்கு வங்கத்தில், வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சூழலை அம்மாநில பாஜக அரசு ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சிபிஎம் கட்சியின் தூதுக்குழுவினர் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.