தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீதி முறைமை கோட்பாடுகளுக்கு முரணானது! திருப்பரங்குன்றம் வழக்குத் தீர்ப்பு குறித்து சிபிஎம் விமர்சனம்

6 Jan 2026, 3:29 pm
நீதி முறைமை கோட்பாடுகளுக்கு முரணானது!  திருப்பரங்குன்றம் வழக்குத் தீர்ப்பு குறித்து சிபிஎம் விமர்சனம்
<p><strong>நீதி முறைமை கோட்பாடுகளுக்கு முரணானது! &nbsp;திருப்பரங்குன்றம் வழக்குத் தீர்ப்பு குறித்து சிபிஎம் விமர்சனம்</strong></p> <p>சென்னை, ஜன. 6 - திருப்பரங்குன்றம் வழக்கில், &nbsp;உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் 2 நீதிபதிகள் அமர்வு அளித்துள்ள தீர்ப்பு, நீதி முறைமைக் கோட்பாடு களுக்கு முரணாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.இதுதொடர்பாக &nbsp;கட்சியின் மாநிலச்செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது சம்பந்தமான மேல் முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரண்டு நீதிபதி கள் அமர்வு அளித்துள்ள தீர்ப்பு சட்டத்தின்படியானதாக இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அழுத்தமாக சுட்டிக்காட்டு கிறது.நீதிபதிகளின் தீர்ப்பில் முன் வைக்கப்பட்டுள்ள தரவுகளும், கருத்துக்களும், மாநில அரசின் மீதான விமர்சனங்களும் பிரச்சனை யின் தன்மையினை உள்வாங்கிய தாகவோ, அரசியலமைப்பு சாச னத்தின் விழுமியங்களுக்கு உகந்த தாகவோ இல்லை. கலவர முயற்சி அறியாததா? &nbsp;திருப்பரங்குன்றத்தில் வேறொரு இடத்தில் தீபம் ஏற்றுவது என்ற கோரிக்கை பக்தர்களால் எப்போதுமே முன் வைக்கப்பட்டதில்லை. உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் பல்லாண்டுகளாக தீபம் ஏற்றி வரு வதை உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு வந்துள்ளனர். மாறாக, மதத்தைப் போர்வையாகக் கொண்டு &nbsp;அரசியல் நோக்கத்துடன் இயங்கக் கூடிய சில அமைப்புகளால் இப்பிரச்ச னை எழுப்பப்பட்டது என்பதும், அத்த கைய அமைப்புகள் மத நல்லிணக்கத் திற்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருபவை என்பதும் தொடர்ச்சியான நிகழ்வு களை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் அறிந்ததே. &nbsp;கூச்சல் புரியவில்லையா? அண்மையில் பாஜகவின் முன்ன ணித் தலைவர் ஒருவர் &ldquo;அயோத்தி யாக மாற்றுவோம்&rdquo; என்று பேசியது ஒரு உதாரணமே. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுமென்ற அரசின் நிலைப்பாட்டை நிராகரித்து இருப்பதும், அரசே அத்தகைய நிலையை உருவாக்கினால் தான் உண்டு என்று கடுமையான விமர்ச னத்தை வைத்திருப்பதும் எந்த ஆதா ரங்களும் அற்றவை மட்டுமல்ல, தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கு கிற அமைப்புகளின் நடவடிக்கை களுக்கு ஊக்கம் அளிக்கிற கருத்துக்கள் ஆகும். தரவுகளை ஏன் கேட்கவில்லை? வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைக்கிற அமைப்புகள் தான், அவர்களது கோரிக்கைக்கான தரவு களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்த குறைந்த பட்ச நிர்ப்பந்தங்களைக் கூட அந்த அமைப்புக்களுக்குத் தராத நீதிமன்ற அமர்வு, நேர்மாறாக குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படவில்லை என்பதற்கான நிரூபணத்தை எதிர்பார்த்திருப்பதும், அவர்களால் தர &nbsp;முடியவில்லை என்பதையே, அங்கே &nbsp;தீபம் ஏற்றப்படலாம் என்ற முடிவுக் கான தர்க்க நியாயமாக மாற்றி இருப்பதும் நீதிசார் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானதாகும். 1994-ஆம் ஆண்டு தீர்ப்பை மட்டும் மேற்கோள் காட்டுவது தீர்ப்புக்கு சாதகமான ஒன்றை தேடி &nbsp;இணைப்பதாகவே இருந்துள்ளதே தவிர, நீதிமன்ற நடவடிக்கைகளின் முழுமையான சாரத்தை உள்வாங்கி யதாக இல்லை. திருமூலரின் வார்த்தைகள் எல்லாம் அதன் ஆன் மீக நோக்கத்தை கடந்து தீர்ப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தர்கா கமிட்டி குறித்த விமர்சனமும் நீதி மன்றத்தின் மீதான நம்பிக்கையை பாதிப்பதாகும். மத நல்லிணக்கம் பேணுவதற்கு இந்த பிரச்சனையை அரசு பயன் படுத்தி இருக்கலாமென்று நீதிமன்றம் கூறுவது வலிந்து கூறுவதாகவே உள்ளது. உண்மையில் இதன் தாக்கங்கள் குறித்து எழும் நியாய மான கேள்விகளுக்கு பதில் சொல்வ தற்கு எதிர்மாறான மதிப்பீட்டை முன்வைப்பதாக உள்ளது. &ldquo;எங்கும் வெளிச்சம் பரவட்டும், எதிலும் சண்டை வேண்டாம்&rdquo; (Only Light, No fight) என்று நீதிமன்றத் தீர்ப்பு கூறுவது சட்டத்தின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் குறிப்பிட்ட சூழலுக்கு பொருந்துவதல்ல. &ldquo;அமை தியும், நல்லிணக்கமுமே வெளிச்சம், அதுவே அடையாளங்கள் கடந்து ஒளிரும் தீபம்&rdquo; என்பதையே மதம் கடந்து மனிதத்தை நேசிக்கும் மக்களின் விழைவு. ஆகவே, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பு சட்டத்திற்கு, நீதி முறைமையின் கோட்பாடுகளுக்கு, அரசியல் சாசன நெறிகளுக்கு முரணானதாக அமைந்துள்ளது என்பதை அழுத்தமாக சுட்டிக் காட்டுவதோடு, தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டுமெனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கை யில் குறிப்பிடப்பட்டு உள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.