முந்தய பக்கம்

ராணிப்பேட்டையில் சிபிஎம், சிபிஐ, விசிக கூட்டு ஆர்ப்பாட்டம்

8 May 2026, 12:37 am
ராணிப்பேட்டையில் சிபிஎம், சிபிஐ, விசிக கூட்டு ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டையில் சிபிஎம், சிபிஐ, விசிக கூட்டு ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, மே 7- ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வு மற்றும் ரயில்வே ஆட்குறைப்பு நட வடிக்கைகளைக் கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக சார்பில் கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வணிக சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெறவும், ரயில்வேயில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வலியுறுத்தி இதில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஐ மாவட்டச் செயலாளர் எ.எஸ். சங்கர் மேஸ்திரி, பாலு, சிபிஎம் மூத்த தோழர்கள் டி. சந்திரன், எல்.சி. மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா. வெங்கடேசன், தாலுகா செயலாளர்கள் ஆர். வெங்கடேசன், ஆர். மணிகண்டன், எஸ். கிட்டு, ஜி. மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

விசிக சார்பில் அரக்கோணம் மாவட்டச் செயலாளர் சந்துரு, மத்திய மாவட்டச் செயலாளர் சீம. ரமேஷ் கருணா, மேற்கு மாவட்டச் செயலாளர் பாபு வளவன், மண்டல பொதுச் செய லாளர்கள் பிரபு தாஸ், சோ. தமிழ், செய்தி தொடர்பாளர் அருளீஸ்வரன், பொரு ளாளர் சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.பி.எம். சீனிவாசன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram