சிபிஎம் - சிபிஐ தலைவர்கள் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு! தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து முறையீடு
1 Jul 2026, 10:25 pm

சிபிஎம் - சிபிஐ தலைவர்கள் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு! தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து முறையீடு

சென்னை, ஜூலை 1 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய இரு கட்சிகளின் மாநிலத் தலைவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை, புதன்கிழமை (ஜூலை 1) அன்று காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

பணிப்பாதுகாப்பற்ற தொழிலாளர்கள்

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் தொழிலாளர் நல னுக்கு எதிராக ஒன்றிய அரசு அறி முகம் செய்துள்ள நான்கு சட்டத் தொகுப்புகளால் ஏற்படும் விளைவு கள், ஒப்பந்தம், அவுட்சோர்சிங் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பணிப்பாதுகாப்பற்ற நிலையில் பணி புரிந்து வரும் பணியாளர்கள், தொழி லாளர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பணிப் பாதுகாப்பு ஏற்பாடு கள் உறுதி செய்யப்பட வேண்டும். புலம் பெயர்ந்து வந்த தொழி லாளர்கள் சந்தித்து வரும் துயரங் களுக்கு தீர்வு காண வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

நிதிச் சுமையை ஏற்றும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம்

ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ள ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத் தால் மாநில அரசுக்கு அதிகரிக்கும் நிதிச் சுமை, தொழிலாளர்களின் சட்டப் பூர்வ வேலை உரிமைகள் பாதிப்பு குறித்தும் முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் தாக்குதல், சிங்கப் பெண் சிறப்புப் படைக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதன் அவசியம், தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா மையங்களை மேம்படுத்துவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உரு வாக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரி ஆற்றின் நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் தற்போது மேகதாது அணை கட்டும் பிரச்சனை தீவிர மாகியுள்ளது. இதுதொடர்பாக சட்ட ப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் “நடுவர் மன்றம்“ அமைக்க வேண்டும் என்ற திருத்தம் சேர்க்கப்பட்டதன் மூலம் பல்வேறு சந்தேக வினாக்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அரசு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவ சாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தொழிலாளர்கள், அவர்களது கோரிக்கைகளுக்காக போராடும் நேர்வுகளில் காவல்துறையின் அணுகு முறை போராடும் தொழிலாளர் களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப் பட்டன.

மக்கள் நலன் காக்க முதலமைச்சர் உறுதி

இடதுசாரிக் கட்சிகளின் தலை வர்கள் முன்வைத்த கருத்துக்களை மிகக் கவனமுடன் உள்வாங்கிய முத லமைச்சர் ச. ஜோசப் விஜய், “கோரிக் கைகளுக்காக முந்தைய காலங் களில் போராடியதை இங்கு குறிப்பிட்டீர்கள், நமது ஆட்சியில் போராட்டங்கள் நடைபெறாத சூழல் ஏற்படும்” என உறுதியளித்தார். மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை எனது கவனத்துக்கு தெரிவிக்க எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறி, இங்கு முன் வைக்கப் பட்ட கருத்துக்கள் மீது உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார்.

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநி லச் செயலாளர் பெ. சண்முகம், மத்தி யக்குழு உறுப்பினர் என். குண சேகரன், மாநிலச் செயற்குழு உறுப்பி னர் க. கனகராஜ் ஆகியோரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் மு. வீர பாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம். மூர்த்தி, மாநிலத் துணைச் செயலாளர்கள் நா. பெரியசாமி, எம். ரவி, தேசியக்குழு உறுப்பினர் எம். செல்வராஜ் ஆகியோர் முதலமைச்சர் உடனான சந்திப்பில் பங்கேற்றனர்.