தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநகராட்சி ஆணையரிடம் சிபிஎம் கவுன்சிலர்கள் மனு

8 Jul 2026, 10:07 pm
மாநகராட்சி ஆணையரிடம் சிபிஎம் கவுன்சிலர்கள் மனு
<p><strong>மாநகராட்சி ஆணையரிடம் சிபிஎம் கவுன்சிலர்கள் மனு\</strong></p><p>கோவை, ஜூலை 8- கோவை மாநகராட்சி ஆணையரை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்ற குழு தலைவரும், 12 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான பி.ராமமூர்த்தி, 24 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.பூபதி, 28 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கண்ணகி, 13 ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் சுமதி, ஆகியோர் செவ்வாயன்று நேரில் சந்தித்து, வார்டு பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தனர். இதுகுறித்து அந்த மனுவில், மாநகராட்சி பட்ஜெட்டில் தங்களது வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட உள்கட்டமைப்புப் பணிகளை முழுமையாக செய்து தர வேண்டும். தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால், சாக்கடைகளை முறை யாக தூர்வார வேண்டும். பழுதடைந்த சாக்கடைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு விரைவாக டெண்டர் விட்டு, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை தொடங்கினால் மட்டுமே டிசம்பர் மாதத்திற்குள் அவற்றை முடிக்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர். மேலும், பில்லூர் 3 குடிநீர் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்டு சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மாநில அரசிடமிருந்து சிறப்பு நிதி பெற வேண்டும். பில்லூர் 3 திட்டத்தில் உள்ள குளறுபடிகளை ஆணையர் நேரடியாகக் கள ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும். அத்துடன், சேதமடைந்த வீதிகளில் கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் சாலைகள் அமைத்துத் தர வேண் டும். 24 ஆவது வார்டு பகுதியில் புதிய திட்டச் சாலை உரு வாக்குதல், தண்ணீர் பந்தல் பிரதான சாலையில் ரவுண்டானா அமைத்தல் மற்றும் வினோபாஜி நகர் பகுதியில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவற்றை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல, 12 ஆவது வார்டு பகுதிக்குட்பட்ட கந்தசாமி நகர் முதல் வயல் தோட்டம் வரை உள்ள பள்ளத்தில் வாய்க்கால் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.