தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

12 Jan 2026, 6:02 pm
திருச்சி விரைவு செய்திகள்

களியக்காவிளை பேரூராட்சியில் செயல்படும் எடைமேடையின் வருவாய் இழப்பை சரிசெய்திடுக! மாவட்ட ஆட்சியருக்கு சிபிஎம் கவுன்சிலர் மனுஅளிப்பு

குழித்துறை, ஜன.12- கன்னியாகுமரி மாவட்டம், களி யக்காவிளை பேரூராட்சியில் செயல்பட்டு வரும் எடைமேடையில் நிதி இழப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பளுகல் - களியக்காவிளை வட்டாரக் குழு உறுப்பினரும், களியக்கா விளை பேரூராட்சி வார்டு உறுப்பினரு மான ஏ.வின்சென்ட் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்திருப்ப தாவது: கன்னியாகுமரி மாவட்டம், களி யக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சியில் ஒற்றாமரம் பகுதியில் காலி வாகனங்கள் மற்றும் பாரம் ஏற்றி வரும் வாகனங்களின் எடை போட எடைமேடை செயல்பட்டு வருகிறது. இந்த எடை மேடையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவருக்கு வேண்டிய 3 நபர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு மாதாமாதம் ஊதியம், தொலைபேசி மற்றும் மின்சார கட்டணம் ஆகியவற்றுக்கு பேரூராட்சி யால் மாதந்தோறும் சுமார்  70 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த எடை மேடையிலிருந்து மாதம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை மட்டுமே வருவாய் கிடைத்து வருகிறது. இதனால் இப் பேரூராட்சிக்கு மாதந்தோறும் ரூ. 65 ஆயிரத்துக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை கடந்த 2 ஆண்டுகளாக தொடர்கி றது. ஆகவே, இந்த எடை மேடையில் கட்ட ணம் வசூலிக்கும் உரிமையை டெண்டர் விடவோ அல்லது சுயஉதவிக் குழுவிடம் ஒப்படைத்து பேரூராட்சியின் நிதி இழப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

65,343 முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 குமரி மாவட்ட ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி, ஜன.12- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலை வர் ஆர்.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 765 நியாய விலைக்கடைகளில் இணைக் கப்பட்டுள்ள 5,79,667 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 406 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் சேர்த்து 580073 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கு அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அத்தியாவசியப் பொருட் கள் வழங்கும் பணி 2025 ஆகஸ்ட்  முதல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து செயல் படுத்தப்பட்டு வருகிறது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 65,343 பயனாளிகள் மாதம்தோறும் பயனடைந்து வருகின்றனர். வழக்கம் போல் ஜனவரி மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொ ருட்கள் வழங்கப்பட்ட போது பொங்கல் பரிசுத் தொகுப்பில்  அடங்கியுள்ள ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்பட்டது.  08.01.2026 முதல் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.3000- ரொக்கம்  ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு   நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டு வரு கிறது. இதுவரை முதலமைச்சரின் தாயுமா னவர் திட்டத்தின் கீழ் 30,463 முதியோர் மற்றும் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கத் தொகை ரூ.3000 வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பொங்கலுக்கு முன்பாக வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

புகையில்லா போகி பண்டிகை பொதுமக்களுக்கு வேண்டுகோள்

நாகர்கோவில், ஜன.12- புகையில்லா போகியை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது. போகிப்பண்டிகையின் பொழுது பழைய பொருட்க ளான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக் கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்ற வற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்பு ணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த  21 ஆண்டுகளாக போகிப்பண்டிகைக்கு முன் பொதுமக்க ளிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்பு ணர்வுப் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது.  இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புவி வெப்பமடைதலை தடுக்க  ஊரக பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல்

நாகர்கோவில், ஜன.12- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்  கீழ் ஊரக பகுதிகளின் பசுமையை அதிகரிக்க வும் புவி வெப்பமடைதலை தடுத்திடவும் மரக்கன்றுகள் நடப்பட்டன. வட்டார, கூடுதல் வட்டார நாற்றங்கால் பண்ணை மற்றும் வனத்துறையுடன் இணைந்த தமிழ்நாடு பசுமை இயக்க நாற்றங்கால் பண்ணைகளில்  மா, பலா, புளி, கொய்யா,  சீதா போன்ற உண்ணக்கூடிய பழ மரக்கன்றுகள் மற்றும் புங்கை, வாகை, அயனி, பூவரசு, வாதுமை, தேக்கு, கொன்றை, வேம்பு போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து பராமரிக்கப்படுகிறது. 6 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்த  மரக்கன்றுகளை ஊரக பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்து  நடுதல் பணிகளை மேற்கொள்ள சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையரால்  அறிவுறுத்தப்பட்டது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-25-ம் நிதியாண்டில் வட்டார மற்றும் கூடுதல் வட்டார நாற்றங்கால் பண்ணை மற்றும்  தமிழ்நாடு பசுமை இயக்க நாற்றங்கால்  பண்ணைகளில் 5-6 அடி மற்றும் 6 அடி உயரத்திற்கு மேல்  வளர்ந்த  மரக்கன்றுகளை ஊரக பகுதிகளில் சாலை ஓரங்கள் குளக்கரை ஓரங்கள், அரசால் வழங்கப்படும் கலைஞர் கனவு இல்லம் போன்ற திட்ட பயனாளிகளின் வீடுகள், அரசு நிறுவன வளாகங்கள் மற்றும் சானல் ஓரங்கள் என பல்வேறு இடங்களில் நடவு பணிகள் 100 நாள்  திட்ட பயனாளிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. செடிகளை பாதுகாப்பதற்கு வேலி அமைத்தல் போன்ற தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு மாவட்டத்தின் அனைத்து ஊரக பகுதிகளிலும் ஏறக்குறைய 68,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை பொது மக்களும் இணைந்து பாதுகாத்து  கன்னியாகுமரி மாவட் டத்தை தூய்மையான பசுமையான மாவட்டமாக பேணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.