மின்சார குறைபாடு, போக்குவரத்து நெருக்கடி பிரச்சனைகள் வருவாய் தீர்வாயத்தில் சிபிஎம் கவுன்சிலர் மனு
19 Jun 2026, 12:18 am

மின்சார குறைபாடு, போக்குவரத்து நெருக்கடி பிரச்சனைகள் வருவாய் தீர்வாயத்தில் சிபிஎம் கவுன்சிலர் மனு

திருப்பூர், ஜூன் 18- ஊத்துக்குளி பகுதியில் மின்சார குறைபாடு மற்றும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் அவ திக்குள்ளாகி வருவதாக பேரூராட்சி சிபிஎம் கவுன்சிலர் கு.சரஸ்வதி வரு வாய் தீர்வாயத்தில் புகாரளித்தார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதனன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாள ரும், பேரூராட்சி 7 ஆவது வார்டு கவுன் சிலருமான கு.சரஸ்வதி மனு அளித் தார். அதில், 7 ஆவது வார்டுக்குட் பட்ட சென்னிமலை சாலை, குளத் தோட்டம், கிணத்தாங்காடு, அரசன் காடு, வெள்ளியந்தோட்டம் பகுதிக ளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகி றது. பல நேரங்களில் குறைந்த அழுத்த மின் குறைபாடும் காணப்படு கிறது. இதனால் வீடுகளில் பயன்ப டுத்தப்படும் மின் கருவிகள் மற்றும் விளக்குகள், மின்விசிறிகள் அடிக்கடி பழுதுகள் ஏற்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பள்ளி கல் லூரி மாணவர்களுக்கும், வீட்டிலி ருந்து கணினி மூலம் பணியாற்றுப வர்களுக்கும் மிகுந்த இடையூறும், அவர்களுடைய அன்றாட பணிகள் செய்ய முடியாத சூழலும் ஏற்படுகி றது. இதுகுறித்து வார்டு கவுன்சிலர் என்கிற முறையில், மின்வாரிய உதவி பொறியாளரை தொடர்பு கொண்டு பேசுவதால் அவ்வப்போது சீர மைப்பு செய்யப்படுகிறது. ஆயினும் இந்த பிரச்சனை தொடர்கதை யாகவே உள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின்மாற்றியில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். ரயில்வே பாதைக்கு மறு புறம் உள்ள பகுதிகளில் தேவை யான அளவு மின்சாரத்தை கடத்தும் மின் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். நீண்ட காலமாக கிடப் பில் உள்ள அணைப்பாளையம் 33 கே.வி. மின் நிலைய பணிகளை விரைந்து முடித்து செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மேற் கண்ட பகுதிகளை ஊத்துக்குளி நக ரப் பகுதி தொடர் அமைப்பிலே சேர்ப் பது பொருத்தமானதாக இருக்கும். மின்னழுத்த குறைபாட்டையும், மின் தடை குறைபாட்டையும் போக்குவ தற்கு ஆய்வுகள் மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்.

போக்குவரத்து நெருக்கடி

ஊத்துக்குளி பேரூராட்சி மற்றும் கவுண்டம்பாளையம் ஊராட்சி மற் றும் வடுகபாளையம் ஊராட்சி சந்திக் கும் மையப்பகுதியில் ஊத்துக்குளி பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் 4 முனை சந்திப்பு உள் ளது. திருப்பூர் சாலை, ஊத்துக்குளி சாலை, கோபி - குன்னத்தூர் சாலை, ரயில் நிலையம் செல்லும் சாலை என முக்கிய சந்திப்பாக உள்ளது. கோபி - படியூர் சாலையில் எப்போதும் கனரக மற்றும் மிக கனரக வாகன போக்கு வரத்து அதிகமாக உள்ளது. அதே போல் ஊத்துக்குளி - பூலுப்பட்டி சாலையிலும் பேருந்து போக்கு வரத்து அதிகம் உள்ள சாலையாக உள்ளது. காலை மாலை நேரங்க ளில் பள்ளி, கல்லூரி பேருந்துகளும் வரும்போது கனரக மற்றும் இல குரக வாகனங்கள் என அதிக வாகன ங்கள் வரும் நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி இந்த முக்கிய சந்திப்பில் ஏற்பட்டு, பொதுமக்களுக்கு நேர விரயம் ஏற்படுகிறது. ஆகவே உடனடியாக ஆய்வு செய்து இந்த நான்கு முனை சந்திப்பில் உள்ள அனைத்து வித ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். ஊத்துக்குளி - பூலுவபட்டி (திருப்பூர் சாலை) மற்றும் குன்னத் தூர் சாலைகளை அகலப்படுத்தியும், இந்த 4 சாலை சந்திப்பு மையத்தில் மையத்திட்டு அமைத்துத்தர வேண் டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது.