தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடியிருப்பு பகுதிகளையொட்டி குப்பைகள் கொட்ட சிபிஎம் மாமன்ற உறுப்பினர் எதிர்ப்பு

13 Jul 2026, 1:06 am
குடியிருப்பு பகுதிகளையொட்டி குப்பைகள்  கொட்ட சிபிஎம் மாமன்ற உறுப்பினர் எதிர்ப்பு
<p><strong>குடியிருப்பு பகுதிகளையொட்டி குப்பைகள் கொட்ட சிபிஎம் மாமன்ற உறுப்பினர் எதிர்ப்பு</strong></p><p>சென்னை, ஜூலை 12- சென்னை மாநகராட்சி 4ஆவது மண்டலக் குழு கூட்டம் தலைவர் நேதாஜி யு.கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொறி யாளர்கள் குமாரசாமி, அன்பரசன் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 41ஆவது வட்ட சிபிஎம் மாமன்ற உறுப்பினர் பா.விமலா பேசுகையில், 38ஆவது வட்டத்தில் மூன்று மதத்தி னருக்கான இடுகாடு கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் எப்பொழுது தொடங்கப்படும். அதற்கு பதிலளித்த அதிகாரிகள் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தனர். ஐ.ஓ.சியில் கட்டப்படும் புதிய பேருந்து நிலை யத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரை சூட்ட வேண்டும் என்றும், தற்போது குப்பை மேட்டில் எழில் நகர், எம்ஜிஆர் நகர், நேதாஜி நகர், தமிழா நகர் ஆகிய பகுதிகளை ஒட்டி உள்ள இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசு வதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பை களை அகற்ற வேண்டும் என்றும் இனி கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் வடசென்னை வளர்ச்சி நிதியில் இருந்து 41ஆவது வட்டத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் பைப்புகள் மாற்றும் பணிகள் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்குவ தற்கு முன் உடனடியாக அந்த பணிகளை தொடங்க வேண்டும் என்றும், சேத மடைந்த சாலைகளை சீர மைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.