சிபிஎம் கவுன்சிலர் தோழர் எஸ்.தெய்வானை விபத்தில் மரணம்
30 Dec 2025, 4:07 pm
<p><strong>சிபிஎம் கவுன்சிலர் தோழர் எஸ்.தெய்வானை விபத்தில் மரணம்</strong></p>
<p>சாத்தூர் மக்கள் கண்ணீர் அஞ்சலி சாத்தூர், டிச.30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டக் குழு உறுப்பின ரும், மாதர் சங்க மாவட்டத் தலைவரு மான சாத்தூர் நகர்மன்ற உறுப்பினரு மான தோழர் எஸ்.தெய்வானை (52), எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி உயி ரிழந்தார். மக்கள் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு சிறந்த போராளியின் மறைவு, சாத்தூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பணியாற்றிய மாண்பு சாத்தூர் மேலகாந்தி நகரைச் சேர்ந்த இவர், தனது கணவர் சங்கரின் ஊக்கத்தால் 1995-இல் மாதர் சங்கப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டார். மாதர் சங்க மாவட்டச் செய லாளர், தலைவர் எனப் படிப்படியாக வளர்ந்த அவர், விளிம்புநிலை மக்க ளின் குரலாகத் திகழ்ந்தார். கடந்த 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில், பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 11-ஆவது வார்டில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நகர்மன்ற உறுப்பினராகப் பதவியேற்றது முதல், அப்பகுதி மக்களின் அடிப்படை வசதி களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் சமரசமின்றிப் போராடி வந்தார். மலைவாழ் மக்கள் சங்க மாவட்டப் பொருளாளர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் எனப் பல தளங்களில் அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. விபத்தும் துயர மறைவும் வெம்பக்கோட்டை பகுதியில் கட்சிப் பணிகளை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை தனி யார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலை யில், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 30 காலை 10 மணியளவில் அவர் உயிரிழந் தார். தோழர் மறைவிற்கு கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப் பினர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தொலைபேசி வாயிலாக ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்தனர். தலைவர்கள் அஞ்சலி கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூனன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மாவட்டச் செயலாளர் அ.குருசாமி, மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.ராதிகா, மாநிலப் பொருளாளர் ஜி.ராணி, துணைத் தலைவர்கள் எஸ்.வாலண்டினா, எஸ். கே.பொன்னுத்தாய், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துக் குமார், பி.மாரியப்பன், எல்.முருகன், எஸ். லட்சுமி, மூத்த தோழர் எஸ்.பாலசுப்பிர மணியன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எம்.சி.பாண்டியன், எம்.சாராள், என்.உமாமகேஸ்வரி உள்ளிட்ட திரளா னோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மறைந்த தோழர் தெய்வானைக்கு கருப்பசாமி என்ற மகனும், பவானி என்ற மகளும் உள்ளனர்.</p>
