சிபிஎம் கவுன்சிலர் முயற்சியால் மின் மயான மேடை சீரமமைப்பு பணிகள் துவக்கம்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>சிபிஎம் கவுன்சிலர் முயற்சியால் மின் மயான மேடை சீரமமைப்பு பணிகள் துவக்கம்'</strong></p>
<p>பொதுமக்கள் பாராட்டு கரூர், நவ.12- கரூர் மாவட்டம், புகளூர் நகராட்சியில் உள்ள 22 ஆவது வார்டுக்கு உட்பட்ட அழகா புரியில் மின் மயானம் செயல்பட்டு வந்தது. இந்த மின் மயானத்தை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மின் மயானத்தை சரியாக பராமரிக்கா ததால் பழுதடைந்து கடந்த சில வருடங்க ளாகவே இந்த மயானம் செயல்பாடு இல்லா மல் இருந்து வந்தது. இதனால் பொது மக்கள் இறந்தவர்களின் உடல்களை மின் மயானத்தில் எரியூட்ட முடியாமல் பெரும் சிர மத்திற்கு ஆளாகினர். மீண்டும் மின் மயா னத்தை சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக் கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது வார்டு கவுன்சிலர் இந்துமதி அர விந்த், நகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து கோ ரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து ரூ.30 லட்சத்தில் இந்த மின் மயானத்தை சீர்படுத்துவது என நகராட்சி கூட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. மின் மயானத்தை சீரமைக்கும் பணிகளை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 22 ஆவது வார்டு கவுன்சிலர் இந்துமதி அரவிந்த் வரவேற்று பேசினார். நகராட்சி தலைவர் குணசேகரன், துணைத் தலைவர் பிரதாபன், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிபிஎம் கவுன்சிலர் இந்துமதியை பொதுமக்கள் பாராட்டி, நன்றி தெரிவித்தனர். இப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய உறு துணையாக இருந்த நகராட்சி தலைவர் குணசேரன்,‌ துணைத் தலைவர் பிரதாப னுக்கு கவுன்சிலர் இந்துமதி சால்வை அணி வித்தார்.</p>
