தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனைக் கூட்டம்

29 Oct 2026, 12:43 am
சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனைக் கூட்டம்

சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனைக் கூட்டம்

கோவை, அக்.28-எஸ்ஐஆர் விவகாரத்தை கண்டித்து, வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனைக் கூட்டத்திலிருந்து சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் பிரதிநிதிகள் வெளிநடப்புசெய்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும்வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்டஆட்சியர் பவன்குமார் தலைமையில் புதனன்று நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, சிறப்புதீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான எஸ்ஐஆரைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியதேசிய காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த இக்கட்சிகளை சேர்ந்தவர்கள், கோடிக்கணக்கான மக்களின் வாக்குறுமையை பறித்த ஞானேஸ்குமார் பதவி விலக வேண்டும் என முழக்கங்களை எழுப்பியபடியே வெளியே வந்தனர்.

இதுகுறித்து சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இராமமூர்த்தி கூறுகையில், எஸ்ஐஆர்நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்,இத்தகைய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது பொருத்தமற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்ததாகவும்தெரிவித்தார். இதில், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆர். முருகேசன், கோவை கிழக்கு நகரக்குழுச் செயலாளர் என். சுபாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளர் சி.தங்கவேல், காங்கிரஸ் சார்பில் கார்த்திக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கேசவ முருகன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.