திருப்பூர் வேட்பாளர்களுக்கு சிபிஎம் வாழ்த்து!
31 Mar 2026, 4:50 pm
<p><strong>திருப்பூர் வேட்பாளர்களுக்கு சிபிஎம் வாழ்த்து!</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 31 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூர் தெற்குத் தொகுதியில் போட் டியிடும் திமுக வேட்பாளர் ந.தினேஷ்குமார், திருப்பூர் வடக்குத் தொகுதியில் போட் டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.ரவி ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு வந்து ஆதரவு திரட்டினர். திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத் திற்கு செவ்வாயன்று காலை ந.தினேஷ் குமார் வருகை தந்தார். அவருடன் திமுக தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி.நாக ராஜ், உசேன், மாமன்ற உறுப்பினர் செந் தில்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வந் தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மாநகரச் செயலாளர்கள் டி.ஜெயபால், பா. சௌந்தரராசன், வடக்கு ஒன்றியச் செய லாளர் ஆர்.காளியப்பன், வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்ட, மாநகர, ஒன் றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வரவேற்றனர். வேட்பாளர் ந.தினேஷ்குமார் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு பய னாடை அணிவித்து, ஆதரவு திரட்டினார். கட்சியின் சார்பில் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி ஆகியோர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை தமிழ்நாட்டில் வெற்றி பெறச் செய்வோம். திருப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை படு தோல்வி அடையச் செய்வோம். அனைவரும் இணைந்து தீவிரமாக தேர்தல் பணியாற்று வோம் எனக் கூறினர். வேட்பாளர் ந.தினேஷ்குமார் பேசுகை யில், ஒவ்வொரு குடும்பமும் பயனடை யும் வகையில் திமுக அரசு பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிடும் பாஜகவை படு தோல்வி அடையச் செய்வது என்பது நம் அனைவரின் பொதுவான லட்சியமாக உள் ளது. எனவே அதிகப்படியான வாக்கு வித்தி யாசத்தில் பாஜகவை தோற்கடிப்போம் என்று கூறினார். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் திருப்பூர் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ரவி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவருடன் மாநகர துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், பி.ஆர்.நட ராஜன், எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட இந் திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வந்தனர். வேட்பாளர் எம்.ரவிக்கு கட்சியின் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் வர வேற்றார். இதில் பேசிய வேட்பாளர் எம்.ரவி மார்க்சிஸ்ட் கட்சி அணியினர் கடந்த தேர்த லில் சிறப்பான முறையில் பணியாற்றியதை நினைவு கூர்ந்து, இந்த தேர்தலிலும் இணைந்து பணியாற்றி மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய் வோம், என்றார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் பேசுகையில், தேர்தல் பேச்சு வார்த்தை முடிவுற்று தேர்தல் பணி தொடங்கி யுள்ள நிலையில் அனைத்தையும் கடந்து இந்த அணியை 100 சதவிகிதம் வெற்றி பெறச் செய்ய ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்று கூறி னார். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், அணி யினர் திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
