தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு சிபிஎம் வாழ்த்து!

2 Apr 2026, 3:50 pm
கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு சிபிஎம் வாழ்த்து!
<p><strong>கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு சிபிஎம் வாழ்த்து!</strong></p> <p>ஈரோடு, ஏப்.2- ஈரோடு மாவட்டத்திலுள்ள சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டி யிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி &nbsp;தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த னர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பெருந்துறை சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிடும் &nbsp;திமுக வேட்பாளர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், கோபிசெட்டி பாளையம் தொகுதியில் போட்டியி டும் திமுக வேட்பாளர் ஆர்.நல்ல சிவம், அந்தியூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.சிவபாலன் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ் வில், மூத்த தோழர்கள் கே.துரை ராஜ், ப.மாரிமுத்து, ஏ.எம்.முனு சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.பழனிசாமி, ஆர்.விஜய ராகவன், எஸ்.வி.மாரிமுத்து, பெருந்துறை தாலுகா செயலாளர் ஆர்.அர்ஜூனன், கோபி தாலுகா செயலாளர் க.பெருமாள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி. ஏ.விஸ்வநாதன், டி.நவீன் உள்ளிட் டோர் உடனிருந்தனர். இதே போன்று, சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வியாழனன்று வந்த மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சா.செந்தில்நாதனுக்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுரா மன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல &nbsp;பவானி தொகுதியில் போட்டியி டும் திமுக வேட்பாளர் கே.ஏ. சந்திரசேகருக்கு, பவானிசாகர் தொகுதியில் போட்டியிடும் இந்திய &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.எல்.சுந்தரம் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந் நிகழ்வில், சிபிஎம் மூத்த தோழர் கள் கே.துரைராஜ், ப.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பி.பி.பழனிசாமி, ஆர்.விஜய ராகவன், எஸ்.சுப்ரமணியன், பி.சுந் தரராஜன், மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.