திமுக வேட்பாளர் பழனியப்பனுக்கு சிபிஎம் வாழ்த்து
3 Apr 2026, 6:05 pm
<p><strong>திமுக வேட்பாளர் பழனியப்பனுக்கு சிபிஎம் வாழ்த்து</strong></p>
<p>தருமபுரி, ஏப்.3- பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்களை நேரில் சந் தித்து ஆதரவு திரட்டினார். தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக பி.பழனியப்பன் போட்டியி டுகிறார். இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்ள திமுக கூட்டணியின் முக் கிய நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆதரவு திரட்டி வருகிறார். அதன்ஒருபகுதியாக, வெள் ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், வட்டச் செயலாளர் தி.வ. தனுசன், இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை யின் மாநில துணைச்செயலர் கி.அதியமான், விசிக கருத்தியல் பிரிவு மாநிலச் செயலாளர் பொ.மு.நந்தன், மாவட்டச் செயலாளர் சென்னகிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு உள்ளிட்ட கூட் டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதைத்தொடர்ந்து அ.பள்ளிப் பட்டி, அதிகாரப்பட்டி, மாரியம்பட்டி, கவுண் டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட பகுதிகிளில் பி.பழனியப்பன் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு அப் பகுதி மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.</p>
