சிபிஎம் தலைமையில் மத மறுப்பு காதல் திருமணம்
8 hours before

சிபிஎம் தலைமையில் மத மறுப்பு காதல் திருமணம்

திருப்பூர், செப்.14 -மதம் மறுத்து காதலித்து வந்த இணையர்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் திருப்பூரில் காதல் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

திருப்பூர் முருங்கப்பாளையத்தை சேர்ந்த ஆஷிக் சாகுல் அமீது. இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். அதேபோல் திருப்பூர் கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த கீர்த்தனா. தனியார்பின்னலாடை தணிக்கை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து குடும்பத்தாரிடம் பேசியுள்ளனர். எனினும் பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, காதலர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தொடர்பு கொண்டுதிருமணம் செய்து வைக்க கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் இருவருக்கும் சாதி, மத, சடங்கு, சம்பிரதாய மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் சி.மூர்த்தி தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாரன் மணமக்களுக்கு மலர் மாலை எடுத்துக் கொடுத்தார். இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். இந்த நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் திரளானகட்சி அணியினர், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். சட்டப்படி இவர்கள் திருமணத்தை பதிவு செய்துவைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.