முந்தய பக்கம்

தோழர் வி.முருகையன் மறைவு சிபிஎம் இரங்கல்

14 Dec 2025, 3:45 pm
தோழர் வி.முருகையன் மறைவு சிபிஎம் இரங்கல்
<p><strong>தோழர் வி.முருகையன் மறைவு சிபிஎம் இரங்கல்</strong></p> <p>சென்னை, டிச.14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்க தலைவராகவும் சிறந்து விளங்கிய தோழர் வி. முருகையன் (89) வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்துகிறது. தோழர் வி.முருகையன் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்தவர். சென்னையில் பின்னி மில் தொழிலாளியாக பணியாற்றிய காலத்தில் தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தலைமையேற்றவர். பிறகு பின்னி மில் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் திறம்பட செயல்பட்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியின் மாவட்டக்குழு, மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். &nbsp;1980 ஆம் ஆண்டு பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று வடசென்னை மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்றவர். தனது இறுதி மூச்சு வரை கம்யூனிச நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக விளங்கியவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், வடசென்னை மாவட்ட தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram