தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களை மத ரீதியாகத் துண்டாடுவதற்கு ஒன்றிய அரசு சதி ‘மக்கள் தொகையியல் மாற்றங்கள்’ குறித்த உயர்நிலைக் குழு கலைக்கப்பட வேண்டும்!

2 Oct 2026, 9:00 pm
மக்களை மத ரீதியாகத் துண்டாடுவதற்கு ஒன்றிய அரசு சதி ‘மக்கள் தொகையியல் மாற்றங்கள்’ குறித்த உயர்நிலைக் குழு கலைக்கப்பட வேண்டும்!

மக்களை மத ரீதியாகத் துண்டாடுவதற்கு ஒன்றிய அரசு சதி ‘மக்கள் தொகையியல் மாற்றங்கள்’ குறித்த உயர்நிலைக் குழு கலைக்கப்பட வேண்டும்!

சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, அக். 2 -‘மக்கள் தொகையியல் மாற்றங்கள்’ குறித்த உயர்நிலைக்குழு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்றும்; இதுகுறித்து தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு உடனடியாக கடிதம் எழுத வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள மக்கள்தொகையியல் மாற்றங்கள் குறித்த உயர்நிலைக்குழுவின் (High Level Committee on Demographic Changes) 35 அம்சக் கேள்வித்தாள், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின்சிறுபான்மையினருக்கு எதிரான உள்நோக்கத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.

நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரும் சவாலாக மாறியுள்ள ஒன்றிய அரசின் இந்த ஆபத்தான முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.ஏற்கெனவே, நாடு முழுவதும் அதிகாரப்பூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் நிலுவையில் இருக்கும் வேளையில், அதற்கு இணையாக சட்டத்திற்குப் புறம்பான வகையில், இப்படி ஒரு புதிய குழுவை அமைத்துத் தரவுகளைத் திரட்டுவது பாஜகவின்விஷமத்தனத்தை வெளிப்படுத்துகிறது. மாநிலங்களிடம் கல்விச் சேர்க்கை, நில உரிமை மாற்றங்கள், பழங்குடியின மக்கள் மதமாற்றம் மற்றும்வாக்காளர் பதிவு போன்ற விபரங்களை மதம் வாரியாக இக்குழு கேட்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது.

மதச்சார்பின்மைக்கு எதிராக இந்துத்துவா அரசியல் சதி

குறிப்பாக, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் மதம் குறித்த விபரங்களை இக்குழு சேகரிப்பதும், இந்தக் குழுவில் ஒரு மக்கள்தொகையியல் நிபுணர் கூட இல்லை என்பதும், பாஜகவின் உள்நோக்கத்தை நன்கு வெளிப்படுத்துகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை (Delimitation) ஆகியவற்றுடன் இந்த மக்கள்தொகையியல் குழுவின்செயல்பாடுகளையும் இணைத்துப் பார்க்கும்போது, இது இந்நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரான கார்ப்பரேட் இந்துத்துவா அரசின் சதி என்பது தெளிவாகிறது.தவெக அரசும் - முதல்வரும் கடுமையாக எதிர்க்க வேண்டும்!மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின், இத்தகைய மக்கள்தொகையியல் உயர்நிலைக் குழுவின் (HLCDC) ஆபத்தான நகர்வுகளைக் கண்டித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் உடனடியாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி வெளியிட வேண்டும். தமிழக வெற்றிக் கழக அரசாங்கம், மாநில சுயாட்சியைக் காக்க இக்குழுவின் கேள்வித்தாளை நிராகரித்து, அதன் உள்நோக்கத்தை பகிரங்கமாக எதிர்க்க வேண்டும். கூட்டாட்சிக்கு எதிரான மாநில உரிமைகளைப் பறிக்கும் மக்கள்தொகையியல் மாற்றங்கள் குறித்த குழுவிற்குத் தமிழ்நாடு அரசு எவ்விதத் தரவுகளையும் வழங்கி ஒத்துழைக்கக் கூடாது.எனவே, ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள இந்தத் திட்டமிட்ட சதியை உடனடியாகக் கைவிட வேண்டுமென்றும், மக்கள் தொகையியல் குழுவை முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.