போராடும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதா? தமிழ்நாடு காவல்துறையின் சட்டவிரோத அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் : தவெக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!
22 Jul 2026, 9:17 pm

போராடும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதா? தமிழ்நாடு காவல்துறையின் சட்டவிரோத அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் : தவெக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

சென்னை, ஜூலை 22 - போராடும் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வகையில், தமிழ்நாடு காவல்துறை யின் சட்டவிரோத அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அறவழிப் போராட்டம் மீது அரசு அடக்குமுறை!

ஒன்றிய பாஜக அரசு அமலாக்கி வரும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு காரணமான ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும், நீட் தேர்வில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கை களை முன்வைத்து தலைநகர் தில்லியில் அறவழிப் போராட்டம் நடந்து வருகிறது.

காவல்துறையினரின் கீழ்த்தரமான அணுகுமுறை!

இதனிடையே, சோனம் வாங்சுக் கைதை எதிர்த்து, ஊர்வலம் செல்ல முயன்ற மாண வர்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தன மான தடியடித் தாக்குதலை நடத்தியதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள் ளனர். மாணவிகளிடம் மிகவும் கீழ்த்தரமான அணுகுமுறையை காவல்துறையினரும், துணைநிலை ராணுவ வீரர்களும் கையாண்டுள் ளனர். அனைத்தும் வீடியோக்களாக வெளிவந்துள்ளன.

போராடும் ஜனநாயக உரிமைக்கு எதிரானது!

நெஞ்சம் பதைப்பதைக்கும் வகையி லான, ஒன்றிய பாஜக அரசின் மிக மோச மான இந்த அடக்குமுறையைக் கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்து ள்ளன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மூன்று நாட்களாக சென்னையில் ஓரி டத்தில் அமர்ந்து போராட வழியில்லாமல் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு காவல்துறையால் அலைக்கழிக்கப்படுகின்ற னர். மூன்று நாட்களாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை போராடும் ஜனநாயக உரிமைக்கு எதிரானது.

இதுவரை நடந்திராத மோசமான அத்துமீறல்!

புதனன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பு செய்து போராடியுள்ள னர். காவல்துறையானது, சென்னையில் திருவொற்றியூர், ஆர்.கே. நகர், பெரம்பூர் மற்றும் கோவை, மதுரை, கடலூர், தஞ்சா வூர் உள்ளிட்ட பல நகரங்களில், கல்வி வளா கத்திற்குள்ளேயே புகுந்து கைது செய்துள் ளது இதுவரை நடந்திராத செயல். இது மிக மோசமான அத்துமீறல் ஆகும். காவல்துறை கல்லூரி வளாகங்களுக்குள் சென்று மாணவர் களை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இதுபோன்ற ஜனநாயக விரோத அத்துமீறல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

முதல்வர் தலையிட்டு கட்டுப்படுத்த வேண்டும்!

போராடும் உரிமையை நசுக்குகின்ற தமிழ்நாடு காவல்துறையின் செயல்கள் உட னடியாக நிறுத்தப்பட வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பாக இருக்கிற மாநில முதலமைச்சர் ஜனநாயக உரிமைகள் சார்ந்த போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்க நினைக்கும் காவல்துறையை கட்டுப்படுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், ஜனநாயக ரீதியில் அறப்போராட்டங்களை நடத்தும் போது, உரிய இடத்தை ஒதுக்கித் தர வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தவெக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களின் ஜனநாயக குரல்களை நெறிப்பது பாஜகவின் கல்விக் கொள்கைக்கு துணை போவ தாகவே அமைந்து விடும். எனவே, தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோத அத்துமீறல் களை உடனடியாக நிறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.