சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தில் வகுப்புவாத கோஷம் வன்முறை அரசியலுக்கு முயன்ற சங்பரிவார் கும்பலுக்கு சிபிஎம் கண்டனம்
3 Jan 2026, 2:20 pm
<p><strong>சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தில் வகுப்புவாத கோஷம் வன்முறை அரசியலுக்கு முயன்ற சங்பரிவார் கும்பலுக்கு சிபிஎம் கண்டனம்</strong></p>
<p>நாகர்கோவில், ஜன.3 - புராதன சிறப்பு மிக்க குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் தேரோட்டத்தின் போது பதற்றத்தை ஏற்ப டுத்தும் வகையில் “சாவர்க்கர் வாழ்க” என முழக்கமிட்டு அராஜகத்தில் ஈடுபட்டு, வன்முறை அரசி யலுக்கு முயன்ற சங்பரிவார் கும்பலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கன்னியாகுமரி மாவட் டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி தேரோட்டம் ஜனவரி 2 (வெள்ளி) அன்று காலை நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான மக்களுடன் தமிழ்நாடு இந்துசமய அற நிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால் வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சி யர், காவல் கண்காணிப்பா ளர் உள்ளிட்ட உயர் அதி காரிகள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர். அமைச்சர்கள் வரும் வழியில் நின்ற ஒரு கும்பல், தேரை வடம் பிடிக்காமல் சங்பரிவாரத்தின் வகுப்பு வாத முழக்கங்களை எழுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘சாவர்க்கர் வாழ்க’ என கோஷமிட்டு பாஜக வினர் பக்தியின் பெயரால் வன்முறை அரசியலுக்கு முயன்றுள்ளனர். இவர்கள் அமைதிக்காக பக்தியுடன் கோவிலுக்கு வருபவர்கள் அல்ல என்பதையே இது உணர்த்துகிறது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக் கிறது. கோவில்களை மைய மாக கொண்டு வன் முறைக்கு களம் அமைக்கும் முயற்சிகளுக்கு இறை நம்பிக்கை உள்ள எவரும் துணைபோக மாட்டார்கள். குமரி மாவட்ட மக்கள் அமைதியை விரும்பக் கூடி யவர்கள். அதை உறுதிப் படுத்த உரிய நடவடிக் கையை தமிழக அரசு மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.</p>
<p> </p>
