புதுச்சேரியைப் போலி மருந்துகளின் கூடாரமாக மாற்றிய என்.ஆர்.காங்கிரஸ் பாஜக அரசு : சிபிஎம் கண்டனம்
15 Jul 2026, 10:10 pm

புதுச்சேரியைப் போலி மருந்துகளின் கூடாரமாக மாற்றிய என்.ஆர்.காங்கிரஸ் பாஜக அரசு : சிபிஎம் கண்டனம்

புதுச்சேரி, ஜூலை 15 - புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசின் துணையோடு கடந்த நான்காண்டு காலமாகப் போலி மருந்து உற்பத்தியும் விற்பனையும் தடையின்றி நடந்து வருகிறது. மக்களின் உயிரோடு விளையாடி வரும் இந்த அரசு ஆட்சியில் தொடரும் தார்மீக உரிமையை முற்றிலும் இழந்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக் குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.

பின்னணியில் மற்றொரு போலி ஆலை

இது தொடர்பாகச் சிபிஎம் மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேசத்தில் தொடங்கி புதுச்சேரி வரை நீண்டிருந்த முந்தைய போலி மருந்து மோசடி அதிர்வலை களை ஏற்படுத்துவதற்குள், தற்போது புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை இயங்கி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் குறிப் பிட்டுள்ளார். இராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 3 லட்சம் போலி வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விசாரணையின் அடிப்படையில், புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற் பேட்டையில் கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித அனுமதியுமின்றி இயங்கி வந்த போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூட்டுக்களவாணித்தனம்

முந்தைய போலி மருந்து விவகாரம் பூதாகரமாக வெடித்த பிறகும் புதுச்சேரி அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை விழித்துக்கொள்ளவில்லை. அந்த மோசடி அம்பலமாகி அரைகுறை விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, அரசுத் துறைகள் கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது அதிகாரிகளின் கூட்டுக்களவாணித்தனத்தையே காட்டுகிறது. ஆளும் தரப்பிற்கும் அதிகாரிகளுக்கும் பணத்தைக் கொடுத்தால், எவ்வித அனுமதியும் பெயர்ப்பலகையும் இன்றிச் சட்டவிரோத தொழிற்சாலைகளை நடத்தலாம் என்ற அவல நிலை நீடிக்கிறது.

உயர்மட்ட விசாரணை தேவை

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி யான ராஜா, அரசியல் செல்வாக்குள்ள ஆளுங்கட்சியினருக்குப் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்திருப்பதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, அரசியல் அழுத்தத்தால் திரும்பப் பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் பதிவு செய்வதோடு, சிபிஐ விசாரணையில் இருட்டடிப்பு செய்யப்பட்ட குற்றவாளி கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசின் எவ்வித அனுமதியும் இன்றி இயங்கிவரும் அனைத்து சட்டவிரோத ஆலைகளையும் உடனடியாகக் கண்ட றிந்து சீல் வைக்க வேண்டும் எனவும், போலி மருந்து ஆலைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் முழுமையான உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு, உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஆளும் தரப்பினர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.