நல்லம்பள்ளியில் பேருந்துகள் நின்று செல்ல மறுப்பதா? - சிபிஎம் கண்டனம்
1 Nov 2026, 12:04 am
<p><strong>நல்லம்பள்ளியில் பேருந்துகள் நின்று செல்ல மறுப்பதா? - சிபிஎம் கண்டனம் </strong></p><p>தருமபுரி, அக்.31-தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அன்றாடம் நல்லம்பள்ளிக்கும் தருமபுரிக்கும் சென்று வருகின்றனர். </p><p>இந்நிலையில், சேலம் நோக்கிச் செல்லும் தனியார் பேருந்துகள் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நல்லம்பள்ளி ஒன்றியக் குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், அரசு அனுமதியின்றி தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த கட்டண உயர்வை கண்டிப்பதுடன், உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.</p>
