தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் பேருந்து நிறுவனங்களின் தன்னிச்சையான கட்டண உயர்வு! சிபிஎம் கண்டனம்; நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தல்!

3 Jul 2026, 9:06 pm
தனியார் பேருந்து நிறுவனங்களின் தன்னிச்சையான கட்டண உயர்வு! சிபிஎம் கண்டனம்;  நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தல்!

தனியார் பேருந்து நிறுவனங்களின் தன்னிச்சையான கட்டண உயர்வு! சிபிஎம் கண்டனம்; நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தல்!

சென்னை, ஜூலை 3 - தனியார் பேருந்துக் கட்டணங்கள், தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ள நிலை யில், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக் குடி, விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப் பட்டினம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங் களில் தனியார் பேருந்து நிறுவனங்கள், எவ்வித முன்னறிவிப்புமின்றி நகர பேருந்து கள் மற்றும் புறநகர்ப் பேருந்துகளில் தன் னிச்சையாக கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

50 சதவிகிதம் வரை உயர்ந்த கட்டணம்!

உதாரணத்திற்கு, ரூ. 10-ஆக இருந்த கட்டணம், தற்போது ரூ. 15-ஆக உயர்த்தப் பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையாக உள்ள பொதுப்போக்குவரத்தில், இந்த திடீர் கட்டண உயர்வு ஏழை - எளிய மற்றும் நடுத்தர மக்களின் செலவினத்தை மேலும் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாண வர்கள் உட்பட பலர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். தனியார் பேருந்து நிறுவனங் களின் இந்த தன்னிச்சையான கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மை யாக கண்டிக்கிறது.

அதிகாரிகளின் அலட்சியம் அதிர்ச்சி அளிக்கிறது!

அரசின் உத்தரவின்றி பயணிகள் கட்ட ணத்தை உயர்த்துவது சட்டவிரோதமாகும். ஆனால், இந்த கட்டண உயர்வுக்கு எதிராக போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகங்களும் எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் கண்டும், காணாமலும் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் போக்கு வரத்துதுறை அதிகாரிகள் தலையிட்டு, தனியார் பேருந்து நிறுவனங்களின் தன்னிச் சையான கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலி யுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.