தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊடகவியலாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறல் - சிபிஎம் கண்டனம்

yesterday
ஊடகவியலாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறல் -  சிபிஎம் கண்டனம்

ஊடகவியலாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

"தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான வழக்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளரும், மூத்த பத்திரிகையாளருமான விஜயனை திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்துள்ளதும், அவரது செல்போனை பறிமுதல் செய்து தடுத்து வைத்துள்ளதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விசாரணைக்கு போலீசார் அழைப்பது என்பது சட்டரீதியான நடவடிக்கையே. ஆனால், விசாரணையைத் தாண்டி கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் நோக்கில் நள்ளிரவு நேரத்தில் அழைப்பதும், நீண்ட நேரம் அலைக்கழிப்பதும் சட்டத்திற்கு புறம்பான விசயமாகும். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறிய செயலாகும். இதுபோன்று அத்துமீறிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக நிறுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.