நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் சிபிஎம் கண்டனம்
23 Jul 2026, 10:30 pm
<p><strong>நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் சிபிஎம் கண்டனம்</strong></p><p>புதுக்கோட்டை, ஜூலை 23- நீட் தேர்வுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினரை, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அராஜகமான முறையில் கைது செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் நடைபெறுகிற போராட்டம் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடை பெற்றது. போராட்டத்திற்கு புதுக்கோட்டை காவல்துறை அனுமதி மறுத்து, ஜனநாயக வழியில் போராடியவர்களை கைது செய்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தங்களின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்த்து போராடுவோம் என்று அறிவித்துவிட்டு, தற்போது போராடும் மாணவர்களை, தேடித் தேடி தவெக அரசின் காவல்துறை கைது செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. புதுக்கோட்டை போராட்டத்தில் கைதானவர்களின் கைப்பேசியை அடாவடி யாக பறிமுதல் செய்ததை தட்டிக்கேட்ட வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனனை, புதுக்கோட்டை டிஎஸ்பி பிருந்தா கன்னத்தில் அறைந்து, தள்ளி ரிமாண்ட் செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை யின் இப்படிப்பட்ட போக்குகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் கவனத்தில் உள்ள இடத்தை தேர்வு செய்து போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்குமாறு மாவட்ட காவல்துறையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>
