‘நீட்’ கொடுமைக்கு இன்னும் எத்தனை உயிர்களை இழப்பது? கோவை மாணவி தற்கொலையால் சிபிஎம் வேதனை!
17 Jun 2026, 9:46 pm

‘நீட்’ கொடுமைக்கு இன்னும் எத்தனை உயிர்களை இழப்பது? கோவை மாணவி தற்கொலையால் சிபிஎம் வேதனை!

சென்னை, ஜூன் 17 - தமிழகத்தில் நீட் தேர்வு மேலும் ஒரு மாணவியின் உயிரைப் பறித்துள்ள நிலையில், அந்த அநீதியான தேர்வால், இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுப் பது என்று கேள்வி எழுப்பி, ஒன்றிய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது:

மருத்துவர் கனவுடன் 2 ஆண்டுகளாக பயிற்சி

கோவை மாவட்டம், பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த அனு கீர்த்தனா என்ற மாணவி, 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் கடந்த இரண்டு ஆண்டு களாக நீட் தேர்வை எழுதி வந்தார். நீட் வினாத்தாள் கசிவு, அத னால் ஏற்பட்ட மறுதேர்வு அழுத்தம் காரணமாக கடும் மன உளைச்ச லுக்கு ஆளான அவர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண் டுள்ளார். உயிரிழந்த மாணவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.

தேர்வு ரத்தானதால் மாணவி தற்கொலை!

ஏற்கெனவே, நுழைவுத் தேர்வு களுக்கு தயாராவதால் ஏற்பட்ட அழுத்தம், மருத்துவக் கனவு தள்ளிப் போனதற்கான வருத்தம், நீட் தேர்வு ரத்தான பின்னணியில் மன அழுத்த மாகியுள்ளது. தனது மனநிலை பற்றிய தகவலை அவர் தனது சித்தப் பாவுக்கு செய்தியாகவும் அனுப்பி யுள்ளார். பல சாதனைகளைச் செய்ய வேண்டிய வயதில் அனு கீர்த்தனாவை இழந்திருப்பது அனை வரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நீட் தேர்வை தமிழ்நாட்டின் மீது திணித்துள்ள ஒன்றிய அரசு, நுழைவுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கத் தவறி, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதால் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்?

தமிழகத்திற்கு மோடி அரசு விலக்களிக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு முற்றாக விலக்குப் பெற வேண்டும், ஒன்றிய கல்வியமைச்சர் பதவி விலக வேண்டும் என போராட்டங் கள் நடைபெற்றுவரும் சூழலில், ஒன்றிய அரசு இந்த கோரிக்கை களின் நியாயங்களை ஏற்று நீட் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீட் தேர்வி லிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க ஒன்றிய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது.

துயரமான முடிவுகளை மாணவர்கள் எடுக்கக் கூடாது!

மாணவி அனு கீர்த்தனாவை இழந்து வாடும் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செந்தில் பிரபு உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவ, மாணவிகள் இனி இத்த கைய துயரமான முடிவுகளை எடுக்கக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது.