முந்தய பக்கம்

உருவ கேலி: மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு சிபிஎம் கண்டனம்

yesterday
உருவ கேலி: மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு சிபிஎம் கண்டனம்

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவ கேலி செய்யும் வகையில் பேசிய திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தாராபுரத்தில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்யும் வகையில் பேசினார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“உருவ கேலி செயலில் யார் ஈடுபட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்து வந்திருக்கிறது.

மூத்த அரசியல் தலைவர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாராபுரம் வேட்பாளர் குறித்து சொல்லி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram