பயோமெட்ரிக் - வாக்காளர் அடையாள அட்டை இருந்தால்தான் நலத்திட்ட உதவிகளா? ஒன்றிய அரசுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்
5 Nov 2026, 11:33 pm

பயோமெட்ரிக் - வாக்காளர் அடையாள அட்டை இருந்தால்தான் நலத்திட்ட உதவிகளா?

ஒன்றிய அரசுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்

புதுதில்லி, நவ. 5 –நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டைக்குப் பதிலாக பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அறிமுகப்படுத்தப் போவதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிராமப்புற ஏழைகள் மீதான தாக்குதல்நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான அடிப்படை ஆவணமாக ஆதார் அட்டைக்குப் பதிலாக பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தப் போவதாக ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாகக் கண்டிக்கிறது. இது கிராமப்புற ஏழைகள் மீதான மேலும் ஒரு தாக்குதலாகும்.கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்குப் பயோமெட்ரிக் அங்கீகாரம் எவ்வாறெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறதுஎன்பது பலமுறை அம்பலப் படுத்தப்பட்டுள்ளது.

வயதான பெண் தொழிலாளர் கள் பலரின் கருவிழிப் பதிவுகளை இயந்திரங்களால் சரியாகப் பதிவுசெய்ய முடியாததால், அவர்களுக்கான பலன்கள் மறுக்கப்பட்டுள் ளன. அதேபோல், தேய்ந்துபோன பெருவிரல் ரேகைகளைப் பயோமெட்ரிக் அமைப்பால் அடையாளம் காண முடியாததால், கூலித் தொழிலாளர்களும் நலத்திட்டப் பயன்களைப்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மின்னணு முறையிலான வாடிக்கையாளர் அடையாளச் சரிபார்ப்புக்கு (E-KYC) திறன்பேசிகள் தேவைப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான கிராமப்புறக் குடும்பங்களிடம் அவைஇல்லை.

ஆதாரைத் திடீரெனக் கைவிடுவது ஏன்?

முன்னதாக, ஆதார் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்த ஒன்றிய அரசு, பின்னர் அனைத்துப் பொதுநலத் திட்டங்களிலும்அதை மறைமுக மாகத் திணித்தது. இப்போது, ஆதார் ஒரு பிழையற்ற திட்டம் என்று பறைசாற்றிய அதே அரசே, அதைக் கைவிடுகிறது.வாக்குரிமைகள் மீதான துல்லியமான தாக்குதலாகவும், பெருமளவில் வாக்குரிமையைப் பறிப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கை யாகவும் அமைந்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்(SIR) பணியுடன் இந்த நடவடிக்கை யையும் இணைத்துப் பார்க்க வேண்டும். 13.4 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ள தாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில்விளிம்புநிலைச் சமூகத்தினர், முஸ்லிம்கள், பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அப்பட்டமாக மீறுவதாகும்

இப்போது, நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு வாக்காளர் அடையாள அட்டையைக் கட்டாயமாக்குவது, இத்திட்டங்களை மேலும் பாகுபாடு நிறைந்தவையாக மாற்றும். ஏற்கெனவே, சிறப்புத் தீவிரவாக்காளர் பட்டியல் திருத்தபணியின் மூலம் பெயர்கள் நீக்கப் பட்டுவிட்டன என்ற காரணத்தைக் கூறி, சில மாநில அரசுகள் ரேஷன் உள்ளிட்டபிற சலுகைகளை மறுத்து வருகின்றன. வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவதை அடிப்படையாகக்கொண்டு, ஒருவரின் சமூகநல உரிமைகளைப் பறிக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இதுஅப்பட்டமாக மீறுவதாகும்.

பலன்களை மறுப்பதற்கான சூழ்ச்சியைக் கைவிட வேண்டும்

இந்த நடவடிக்கைகள் அனைத்தும், பெரும்பான்மையான மக்களுக்கு நலத்திட்டப் பலன்களை மறுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியையே சுட்டிக்காட்டுகின்றன. எனவே, பாகுபாடு நிறைந்த இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும், கிராமப்புற ஏழை களால் எளிதில் அணுக முடியாத தொழில்நுட்ப வசதிகள் அல்லது ஆவணங்களை நிபந்தனையாக விதிக்காமல், நலத்திட்ட உரிமைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.(ந.நி.)