தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமைதியான முறையில் போராடியவர்கள் மீது கொடூர தாக்குதல் - சிபிஎம் கண்டனம்

21 Jul 2026, 6:15 pm
அமைதியான முறையில் போராடியவர்கள் மீது கொடூர தாக்குதல் - சிபிஎம் கண்டனம்

தில்லி அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான கொடூர தாக்குதலை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்

"மாணவர் அமைப்புகளின் ஆதரவுடன், நாடாளுமன்றத்தை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணிக்காக ஜந்தர் மந்தரில் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களையும் இளைஞர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு பாராட்டுகிறது.

ஒன்றிய கல்வித்துறையின் தோல்விக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தின் மீது மோடி அரசு காட்டிய சர்வாதிகாரப் போக்குக்கு, அந்தப் பெருந்திரள் கூட்டம் தகுந்த பதிலடி அளித்தது.

தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீச்சு நடவடிக்கைகளை கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய கடுமையான தாக்குதல்களில் மாணவர்களும், இளைஞர்களும் காயமடைந்தனர்; இவர்களில் சிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. கோல் மார்க்கெட்டில் உள்ள சிபிஎம் தலைமையகத்திற்கு முன்பாகவும் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பொறுப்பேற்று, நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வு முகமையை கலைக்கவும் மோடி அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.

இந்த நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்க வேண்டும்; தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; தேசியத் தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்; கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.