தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டியலின மாணவர்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்: சிபிஎம் கண்டனம்

7 hours before
பட்டியலின மாணவர்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்: சிபிஎம் கண்டனம்

பட்டியலின மாணவர்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்: சிபிஎம் கண்டனம்

விழுப்புரம், செப்.4-விழுப்புரம் மாவட்டம், சிறுவாக்கூர் பட்டியலின மாணவர்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளதை விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாககண்டித்துள்ளது.

இது குறித்து மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், காணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுவாக்கூர் கிராம பட்டியலின சமூகத்தை சேர்ந்த சீனுவாசன் என்பவரின் மகன் பிரபாகரன் (வயது 17) விழுப்புரம் பாலி டெக்னிக்கில் இரண்டாவது ஆண்டும், அதேபோல் லெனின் மகன் சந்தோஷ் (வயது16) என்ப வரும் படித்து வருகின்றனர். இதே போன்று அதே கிராமத்தைச் சேர்ந்த இன்னும் சில மாண வர்களும் விழுப்புரத்தில் படித்து வருகின்றனர்.

கடந்த 31.08.2026 அன்று விழுப்புரத்திலிருந்து 6எச் நகரப் பேருந்தில் ஏறி வீடு திரும்பியுள்ளனர். பேருந்து கோனூர் வந்தபோது மற்ற பயணி கள் இறங்குவதற்காக இம்மாண வர்கள் பேருந்திலிருந்து இறங்கி ஏறியுள்ளனர். அப்போது தெளி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் கோனூரில் பேருந்தில் ஏறி உள்ளனர். அதில் ஒருவன் பட்டியலின மாணவனின் கால் தன் கால் மீது பட்டதாக சக வன்னிய மாணவர்களிடம் கூறி வீண் சண்டை வாங்கி உள்ளான்.

மற்ற மாணவர்கள் அசிங்கமாகத் திட்டி அந்த மாண வர்களை அடித்துள்ளனர். இது மாணவர்களுக்கிடையிலான சிறு பிரச்சனை என்று கருதி பாதிக்கப்பட்ட பட்டயலின சமூக மக்கள் புகார் கொடுக்காமல் விட்டுவிட்டனர்.

ஆனால் இதன் தொடர்ச்சியாக 02-09-2026 அன்று மாலை அதே போல் விழுப்புரத்திலிருந்து 6எச் பேருந்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் வீடு திரும்புவதை தெளி மாணவன் ஒருவன் செல்போனில் சொல்ல, தெளி கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி வெறியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் திட்டமிட்டு கோனூருக்கு வந்து பேருந்தை நிறுத்தி சிறுவாக்கூரை சேர்ந்த பட்டியலின மாணவர்கள் ஏழு பேரையும் கோனூரில் இறக்கிஅங்கே வைத்து சரமாரியாக தாக்கி யுள்ளனர். மாணவர்கள் பயந்து போய் சிதறி ஓடி கோனூர் பட்டிய லின குடியிருப்புப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்து உள்ளனர்.தகவல் அறிந்து டூவிலரில் சீனுவாசன் என்பவர் கோனூ ருக்குப் போய் அவர்களைப் பார்த்துவிட்டு 5 பேரை ஆட்டோ வில் அனுப்பிவிட்டு அவரது மகன் பிரபாகரன் மற்றும் சந்தோஷை தனது டூவீலரில் அழைத்துக்கொண்டு தெளி வழி யாக அன்று மாலை சுமார் 6:30 மணி அளவில் சென்றபோது தெளி கிராம ஊராட்சி மன்றத் தலை வரின் கணவர் ஜனார்த்தனன் என்பவர் தலைமையில் 15-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து அந்த மூவரையும் வழிமறித்து தடி, இரும்பு ராடு மற்றும் கற்களால் கொலைவெறி கொண்டு சாதியைச் சொல்லித் திட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் மாணவர் பிரபாகரனுக்கு தலை மற்றும் வலது தோள்பட்டையில் படுகாயம் ஏற்பட்டு முண்டி யம்பாக்கம் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று உள்ளார். சந்தோஷுக்கு வலதுபுற கன்னத்திலும் நாக்கிலும் காயம் ஏற்பட்டது. சீனுவாசனுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து 02-09-2026 அன்று இரவு சுமார் 10-30 மணி அளவில் காணை காவல் நிலையத்தில் சீனுவாசன் புகார் அளித்து உள்ளார். ஆனால், காவல் ஆய்வாளர் முறையான விசாரணை நடத்தாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து, குற்றம் சாட்டப்பட்ட ஜனார்த்தனன், காந்தி, சுகில் செல்வராஜ், முனியப்பன் ஆகியோர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்துவிட்டு பெயருக்கு செல்வராஜ், முனியப்பன் ஆகிய இருவரை மட்டும் ரிமாண்ட் செய்துவிட்டு மற்ற குற்றவாளி களை ஆய்வாளருக்கு தெரிந்த வர்கள் என்பதால் வெளியே அனுப்பிவிட்டார்.

இது முற்றிலும் சட்டவிரோத மான செயல் ஆகும். பாதிக்கப் பட்ட பட்டியலின சமூக மக்க ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றவாளிகள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும். இந்த சம்பவம் சமூக மோதலாக மாறாமல் இருக்க,

சுமூக தீர்வு ஏற்படுத்தக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல் துறை தீவிர கண்காணிப்பு நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.