முந்தய பக்கம்

தோழர் நோவா படத்திறப்பு: குடும்ப நிதியுதவி

28 May 2026, 12:02 am
தோழர் நோவா படத்திறப்பு: குடும்ப நிதியுதவி
<p><strong>தோழர் நோவா படத்திறப்பு: குடும்ப நிதியுதவி</strong></p><p>​​​​​​​திருவள்ளூர், மே 27- விபத்தில் மரணமடைந்த கவரைப் பேட்டை பகுதி சிபிஎம் கட்சித் தோழர் நோவா (எ) சூரியபிரகாஷ் (19) அவர்களின் படத்திறப்பு மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று (மே 26) நடைபெற்றது. எம்.சி.சீனு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் நோவாவின் படத்தை திறந்து வைத்து, அவரது தாயார் காஞ்சனாவிடம் ரூ.60 ஆயிரம் குடும்ப பாதுகாப்பு நிதியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எஸ்.கோபால், டி.பன்னீர்செல்வம், பி.துளசிநாராயணன், டி.கோபாலகிருஷ்ணன், இ.ராஜேந்திரன், ஜி.சூரியபிரகாஷ், டி.மதன், ஏ.பத்மா, கோ.அரவிந்தன், சஞ்சய்குமார், எஸ்.ஆனந்தன், பாபி, வசந்த்பௌத்த உள்ளிட்ட நிர்வாகிகள் புகழஞ்சலி செலுத்தினர். மேலும், ‘எம் அண்ட் பி செட்டி இண்டியா’ நிறுவன உரிமையாளர் பாஸ்கர் மனிஷா ரூ.20 ஆயிரம் நிதி வழங்கியதுடன், நோவாவின் தங்கை கீர்த்தனாவின் கல்வி மற்றும் மருத்துவச் செலவை ஏற்பதாக உறுதியளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram