முந்தய பக்கம்

தோழர் வேலன் இணையர் மஞ்சுளா காலமானார்

8 May 2026, 12:39 am
தோழர் வேலன் இணையர் மஞ்சுளா காலமானார்
<p><strong>தோழர் வேலன் இணையர் மஞ்சுளா காலமானார்</strong></p><p>திருவள்ளூர், மே 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராட்சி பெண்கள் கிளையின் முன்னாள் செயலாளர் தோழர் வி.மஞ்சுளா (வயது 51), காலமானார். சிபிஎம் ஊத்துக்கோட்டை வட்டக் குழு உறுப்பினரும் கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.வேலன் மனைவி தோழர் வி.மஞ்சுளா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் புதனன்று மாலை காலமானார். குடும்பமே கட்சியில் இருப்பதால் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலும் குடும்பத்துடன் பங்கேற்பார். மேலும் மஞ்சுளா பெண்கள் கட்சி கிளையின் செயலாளராக இருந்து திறம்பட பணியாற்றினார். மறைந்த தோழர் மஞ்சுளா-வின் உடலுக்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், ஏ.ஜி.சந்தானம், ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் என்.கங்காதரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.பத்மா, த.கன்னியப்பன், இ.எழிலரசன், தவமணி, மூத்த தோழர்கள் கே.செல்வராஜ், பி.ரவி, வட்டக் குழு உறுப்பினர்கள் எம்.திருப்பதி, ரம்யா, பி.அருள், ரமேஷ், கட்டுமான சங்கத்தின் மாநில துணைத்தலைவர் லூர்துசாமி, மாவட்ட தலைவர் எம்.சி.சீனு, மாவட்ட குழு உறுப்பினர் ரங்கன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டு பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். தோழர் மஞ்சுளா-வின் உடலை தாராட்சியில் உள்ள மயானத்தில் வியாழனன்று (மே 7), மாலை அடக்கம் செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram