நேரு பூங்கா பகுதி வீடுகளுக்கு மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் மின்வாரிய அலுவலகத்தில் சிபிஎம் புகார்
29 Oct 2026, 11:37 pm

நேரு பூங்கா பகுதி வீடுகளுக்கு மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் மின்வாரிய அலுவலகத்தில் சிபிஎம் புகார்

சென்னை, அக்.29–நேரு பூங்கா பகுதியில் மின் கட்டணம் அதிகமாக வசூல் செய்வதையடுத்து புதனன்று (அக். 28) மின்வாரிய அலு வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

எழும்பூர் பகுதி, நேரு பூங்காவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள வீடுகளுக்கு மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அவ்வப்போது மின்வெட்டு நிகழ்கிறது. மின்சார ஒயர்கள் ஆபத்தான முறையில் உள்ளது.

எனவே, இதற்கு தீர்வு காண வலி யுறுத்தி வேப்பேரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வேலுமணியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம்

தலைமையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆ.நாகராணி, பகுதிக்குழு உறுப்பினர்கள் அ.ஆரோக்கியதாஸ், கிளைச் செயலாளர் கள் ம.குப்பன், தி.திருமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.