கோவில் திருவிழாவில் குத்தகை முறைகேடு: சிபிஎம் புகார்
8 Aug 2026, 12:17 am

கோவில் திருவிழாவில் குத்தகை முறைகேடு: சிபிஎம் புகார்

சேலம், ஆக.7-குகை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பாதையோர வியாபாரிகளிடம் அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் கிழக்கு மாநகரச் செயலாளர் கே.பச்சமுத்து தலைமையில் பலர் நெத்திமேடு பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் வெள்ளியன்று மனு அளித்தனர்.

இதுகுறித்து அம்மனுவில், சேலம் மாநகரப் பகுதியில் அமைந்துள்ள குகை மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி பிரசித்தி பெற்ற காரணத்தால் பல்வேறு ஊர்களில் இருந்து பாதையோர வியாபாரிகள் வந்து இப்பகுதியில் சிறிய கடைகள் அமைப்பது வழக்கம். இந்த கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம், தமிழக வெற்றி கழகம் என்கிற பெயரில் ரூ.1500 முதல் ரூ.40 ஆயிரம் வரை வசூல் வேட்டையில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது.இப்பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிழக்கு மாநகரக் குழு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்புக்குழு கன்வீனர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பாதையோர வியாபாரிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் கடை நடத்த அனுமதிக்க வேண்டும். இந்து சமயஅறநிலையத்துறைஅதிகாரிகளில் மறைமுக கண்காணிப்பில் வசூல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக திருவிழா நடைபெறும் நேரத்தில் வசூல் வேட்டையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துமேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதுபோன்ற தவறுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க இந்து சமய அறநிலைத்துறை உரியகண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.