முதுபெரும் தலைவர், தோழர் ஆர்.நல்லகண்ணு மறைவு குமரியில் சிபிஎம், சிஐடியு, அனைத்துக் ்கட்சியினர் அஞ்சலி
26 Feb 2026, 3:28 pm
<p><strong>முதுபெரும் தலைவர், தோழர் ஆர்.நல்லகண்ணு மறைவு குமரியில் சிபிஎம், சிஐடியு, அனைத்துக் ்கட்சியினர் அஞ்சலி</strong></p>
<p>நாகர்கோவில்,பிப்.26- விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் நல்லகண்ணு பிப்ரவரி 25 அன்று காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிப்ரவரி 26 அன்று நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள ஜீவா சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அங்கு நடைபெற்ற அஞ்சலி கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி, திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.நூர்முகமது.தளவாய் சுந்தரம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் ஆர். ராதா கிருஷ்ணன் , மதிமுக மாவட்டச் செயலாளர் வெற்றிவேல்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல இணைச் செயலாளர் பகலவன், சிபிஐ(எம்-எல்) மாநில பொறுப்பாளர் எஸ் .எம் .அந்தோணி முத்து,எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் சுல்பிகிர் அலி மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி உரையாற்றினர். சிபிஎம் அஞ்சலி சிபிஎம் குமரி மாவட்டக்குழு சார்பில் அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. சிபிஎம் ராஜக்கமங்கலம் ஒன்றியக்குழு சார்பில் ஈத்தாமொழி மொழி சந்திப்பில் அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எஸ் .டி .ராஜகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். எஸ்.கண்ணன் உரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு சிஐடியு குமரி மாவட்டக்குழு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ் .சி. ஸ்டாலின் தாஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
