தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தலுக்கு மட்டுமல்ல , எல்லா காலத்திலும் சிபிஎம் எங்களோடுதான் மத்திய சென்னை பிரச்சார இயக்கத்தில் மக்கள் நெகிழ்ச்சி

3 Sept 2026, 1:05 am
தேர்தலுக்கு மட்டுமல்ல , எல்லா காலத்திலும் சிபிஎம் எங்களோடுதான் மத்திய சென்னை பிரச்சார இயக்கத்தில் மக்கள் நெகிழ்ச்சி

தேர்தலுக்கு மட்டுமல்ல , எல்லா காலத்திலும் சிபிஎம் எங்களோடுதான் மத்திய சென்னை பிரச்சார இயக்கத்தில் மக்கள் நெகிழ்ச்சி

சென்னை, செப்.2-மக்களின் வாழ்வாதார உரிமை, அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டக்குழு சார்பில் ஆகஸ்ட் 26 - 31 தேதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.

சென்னையில் உழைக்கும் மக்கள் வாழ்ந்த பகுதிகளை கருப்பர் நகரம் என முத்திரை குத்தி அவர்களது உழைப்பையும் வளங்களையும் சூறையாடியது வெள்ளை ஏகாதிபத்தியம். நாடு விடுதலை அடைந்து 80 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் கருப்பர் நகரத்தை கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காடாக ஆட்சியாளர்கள் மாற்றுகின்றனர்.

அண்ணா நகர், வில்லிவாக்கம், துறைமுகம், சேப்பாக்கம் - திரு வல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, எழும்பூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 85 குழுக்கள் நேரடியாக சென்று வீடு கள், மார்கெட்டுகள், தெருவோர வியாபாரிகள், கடைகளில் மக்களை சந்தித்னர். 40க்கும் மேற்பட்ட மையங்களில் பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்தி னர். இதன் நிறைவாக எழும்பூர் சேத்துப்பட்டில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.

தேச பிரச்சனைகள், மாநில பிரச்சனைகள், உள்ளுர் அளவிலான மக்களின் அடிப்படை பிரச்சினைகள், நடப்பு அரசியல் நிலவரங்கள், ஒன்றிய - மாநில அரசுகளின் மக்கள், தொழிலாளர்கள் விரோத கொள்கை கள் உள்ளிட்ட பொதுவான கோரிக்கைகளை துண்டு பிரசுரமாக கொடுத்தனர். மக்களிடம் உரையாடி உள்ளூர் கோரிக்கைகளை கேட்ட றிந்தனர்.

இந்த பிரச்சார இயக்கங்களில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலை

வர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் பெ.சண்முகம், மூத்த தலைவர் அ.சவுந்தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், ஜி.சுகுமாறன், கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.சி.கோபிகுமார், கே.திருச்செல்வன், வெ.ராஜசேகர்,இரா.சுதீர், மூத்த தலைவர் பா.சுந்தரராஜன்,

மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி,

இ.சர்வேசன், கே.முருகன், எஸ்.வி.வேணுகோபாலன், பகுதிச் செயலாளர்கள் வே.ஆறுமுகம், கே.மகேந்திரவர்மன், ஆர்.குமார், ஆர்.கபாலி, வி.செந்தில்குமார், சி.மார்டின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பிரச்சார இயக்கத்தின் போது தலைவர்களிடம் பேசிய பலரும் கூறியதாவது: எல்லா அரசியல் கட்சிகளுமே தேர்தல் நேரத்தில் தான் எங்களிடம் வருவார்கள். அதன் பிறகு யாரும் வரமாட்டார்கள். ஆட்சிக்கு வந்தவர்கள் எங்களை எட்டிக்கூட பார்க்கமாட்டார்கள்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் தேர்தல் காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் எங்களுடன் இருந்து பிரச்சனைகளுக்காக போராடுகிறார்கள் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குதல், வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு முறையான மாற்று இடம் வழங்கி மறுவாழ்வை உறுதி செய்ய வேண்டும். குடிநீர் பற்றாக்குறை போக்கி, சீராக குடிநீர் தர வேண்டும். மழைக்காலங்களில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கை தவிர்க்க கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நவீன மழைநீர் வடிகால்வாய்களை அமைக்க வேண்டும் என்று வலி யுறுத்தினர்.

விலைவாசி உயர்வால் குடும்பங்களை நடத்த முடியாமல் அல்லல்படும் சாமானிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தி தரமான சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றனர்.

போதைப்பொருள் புழக்கம், சமூக விரோதிகளின் அடாவடிகளை தடுக்க வேண்டும், சொத்து வரியை வசூல் செய்யும் மாநகராட்சி, தெருக்களை, உட்புறச்சாலைகளை கூட ஒழுங்காக அமைப்பதில்லை. அடிப்படை வசதிகளை செய்வதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் மக்கள் கூறினர்.

நகரத்தை அழகுபடுத்தும் தூய்மை பணியாளர்களாகிய எங்களை பணி நிரந்தரம் செய்ய முன்பு இருந்த அரசு மறுத்தது. இப்போதுள்ள அரசும் செய்ய மறுக்கிறது என்று தூய்மைப்பணியாளர்கள் தெரி வித்தனர்.

தெருவோர நடைபாதை வியா பாரிகளுக்கு எந்தவித முன் அறி விப்பும் இல்லாமல் கடைகளை அகற்றுவது, தள்ளுவண்டிகளை புல்டோசரால் நொறுக்குவது போன்ற அராஜகத்தை மாநகராட்சி நிர்வாகம் செய்கிறது. தெருவோர வியாபாரிகளை பாதுகாக்க தனிச் சட்டம் உள்ளது. நகர விற்பனைகுழு கூட்டத்தை நடத்தாமல், தேர்ந்தெ டுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தகவல் தராமல் இத்தகைய அரா ஜகத்தில் ஈடுபடுகின்றனர் என்று சாலையோர வியபாரிகள் குமுறினர்.

தொழிற்சாலைகள், அரசுப்பணி களில் ஒப்பந்த முறையில் பணிய மர்த்தும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லை என்று குமுறிய தொழிலாளர்கள் எங்களுக்

காக குரல் கொடுப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய மக்களிடம், நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை குடியரசு தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதால் தவெக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம். ஆட்சியாளர்களின் கொள்கை முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளது. மக்கள் தங்களது தேவைகளை ஏராளமாக வெளிப் படுத்துகின்றனர். அவற்றை கோரிக்கைகளாக மாற்றி மக்கள்இயக்கமாகவும், போராட்டங்களா கவும் முன்னெடுக்க உள்ளோம், இதற்கெதிராக நாங்கள் மட்டும் போராட்டம் நடத்தினால் போதாது. நீங்களும் வர வேண்டும் என்று தலைவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். நகரத்தை உருவாக்கியவர்களுக்கு சொந்தமாக 100 சதுர அடி கூட வீடு இல்லையா சென்னை யாருக்கானது என்று கேள்வி எழுப்பினர். கார்ப்பரேட் மயமாகும் சென்னை நகரத்தை உழைக்கும் மக்கள் நகரமாக மாற்று வோம். வாக்கு மட்டுமே கேட்டு வரும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் மக்களுக்காக மக்களோடு இணைந்து போராட்டம் நடத்த, அதற்கான தயாரிப்பு நடவடிக்கை யாக மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் வெகுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.- வீ.கவிமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.