தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘ஈஷா’ மர்ம மரணங்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக! தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

26 Jun 2026, 10:13 pm
‘ஈஷா’ மர்ம மரணங்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக! தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

‘ஈஷா’ மர்ம மரணங்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக! தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 26 - ஈஷா யோகா மையத்தில் அடுத்தடுத்து நிகழும் மர்ம மரணங்கள் குறித்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்ற ஊழியர் அந்த மையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதும், ஜூன் 22 அன்று நெல்லை மாவட்டம், மடத்துப் பட்டியைச் சேர்ந்த மலர்விழி (வயது 45) என்ற பெண் கழிப்பறையில் சடலமாக மீட்கப்பட்டதும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தொடர்கதையாகும் ‘ஈஷா’ மரணங்கள்

ஈஷா யோகா மையத்தில் 2022-ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் பயிற்சிக்கு வந்த நிலையில் மர்மமான முறை யில் காணாமல் போனார். பிறகு அங்கிருந்த ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அதே போன்று 2016-ஆம் ஆண்டு பொறியியல் பட்ட தாரிகளான தனது இரண்டு மகள்களை மூளைச் சலவை செய்தும், போதைப் பொருட்கள் கொடுத்தும், மொட்டையடித்தும் சித்ர வதை செய்யும் ஜக்கி வாசுதேவின் பிடியி லிருந்து- தனது மகள்களை மீட்டுத் தர வேண்டு மென மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேராசிரியர் ஒருவர் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

உடல்களை எரியூட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதுபோன்று பல்வேறு காலக்கட்டங்களில் தங்களது பிள்ளைகளை மூளைச் சலவை செய்து ஈஷா மையக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாக பெற்றோர்கள் தரப்பில் நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனுக்களும் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. மேலும் ஈஷா யோகா மையத்தில் உள்ள மயான மேடையில் சட்டப்பூர்வமான தக வல்கள் அளிக்காமல் முறைகேடான வகையில் உடல்கள் எரியூட்டப்படுகின்றன என்ற புகார் களும் இந்த மையத்தின் மீது உள்ளது.

சட்டத்தின் பிடியிலிருந்து தப்பும் ஈஷா நிறுவனர்?

இந்த மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசு தேவ் ஒன்றிய அரசின் உச்சபட்ச தலைவர்களுட னும், ஆட்சியாளர்களுடனும், ஒன்றிய, மாநில அரசு உயர் அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்புகளில் உள்ளதால் வழக்கு விசாரணை களை நீர்த்துப் போகச் செய்து சட்டத்தின் பிடியி லிருந்து தப்பித்து வருவதாகவும் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆன்மீகத்தின் பெயரால் ஈஷா மையத்தின் செயல்பாடுகள் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. எனவே, ஈஷா மையத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த மரணங்கள், ஏற்கனவே நடந்துள்ள சந்தேக மரணங்கள் குறித்து விசாரிப்பதற்கும், ஏற்கனவே இந்த மையத்தின் மீது போதைப் பொருள், நில மோசடி, வன விலங்குகள் மீது தாக்குதல், மனித உடல் தகனம் உள்ளிட்டு அடுக்கடுக்கான புகார்கள் குறித்து விசாரிப்ப தற்கும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய முறையில் விசாரணை செய்து உண்மை களை கண்டறிய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.