புதுச்சேரியில் சிபிஎம் வேட்பாளர்கள் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
27 Mar 2026, 3:15 pm
<p><strong>புதுச்சேரியில் சிபிஎம் வேட்பாளர்கள் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு </strong></p>
<p>புதுச்சேரி,மார்ச் 27- சிபிஎம் வேட்பாளர்கள் புதுச்சேரியில் வீடு வீடாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். புதுச்சேரி சட்டப் பேரவை தேர்தலில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வரு கிறார்கள். புதுச்சேரி சட்டப் பேரைவைத் தேர்தலில் சிபிஎம் இலாஸ்பேட்டை, திருபுவனை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. லாஸ்பேட்டை லாஸ்பேட்டை தொகுதி யில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.ராஜாங்கம் பெத்து செட்டி பேட்டையில் இருந்து தனது வாக்கு சேகரிப்பு பிரச்சா ரத்தை வெள்ளிக்கிழமை ( மார்ச்-27)துவக்கினார். இப்பிரச்சாரத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர் கொளஞ்சியப்பன், உழவர்கரைநகர செய லாளர் ஆர்.எம்.ராம்ஜி, மாநிலக்குழு உறுப்பினர் கள் ஜோதிபாசு, ஆனந்த், முனியம்மாள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் அரி கிருஷ்ணன்,நிலவழகன் மற்றும் ராமசாமி, குணசேகரன் உட்பட பலர் வாக்குசேகரிப்பு பிரச்சா ரத்தில் பங்கேற்றனர். முன்ன தாக பெத்து செட்டிபேட்டை வார்டு முழுவதும் வீதி வீதியாக விட்டு மக்கள் சந்தித்து அரிவாள் சுத்தி யல் நட்சத்திரம் சின்னத் திற்கு வாக்கு சேகரித்தனர். திருபுவனை திருபுவனை தொகு திக்கு உட்பட்ட செல்லிப் பட்டு பகுதியில் சிபிஎம் வேட்பாளர் தட்சிணா மூர்த்தி வீடு வீடாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித் தார். அப்போது அப்பகுதி மக்கள் வேட்பாளரை வர வேற்று கதராடை அணி வித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இப்பிரச் சாரத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன்,சீனுவாசன்,மண்ணாடிப்ட்டு கொம்யூன் கமிட்டி செயலா ளர் அன்புமணி, மாநிலக் குழு உறுப்பினர்கள் சங்கர், மதிவாணன், இளவரசி மற்றும் கமிட்டி உறுப்பி னர்கள் உட்பட திரளானோர் பிரச்சாரத்தில் பங்கேற்ற னர். புதுச்சேரி சட்டப்பேர வைக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற வுள்ளது. 12 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடித் துள்ளது. சிபிஐ, சிபிஎம், சிபிஐ எம்எல் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் தனித் தனியே போட்டியிடுகின்றன. திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டா லும் 6 தொகுதிகளில் இரு கட்சிகளின் வேட்பாளர் களும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். வைத்திலிங்கம் நழுவல் திமுகவை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிகாரப் பூர்வ வேட்பாளர்கள் அல்ல என்று புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கம் கூறியுள்ளார். அவர்கள் வெற்றிபெற்றால் என்னவாகும் என்று செய்தி யாளர்கள் கேட்டதற்கு அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நழு வினார்.</p>
