வாழ்வாதாரத்தை இழக்கும் முதியவர்கள் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி வாக்கு சேகரிப்பின் போது கிராம மக்கள் வேதனை
27 Sept 2026, 3:07 am

வாழ்வாதாரத்தை இழக்கும் முதியவர்கள் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி வாக்கு சேகரிப்பின் போது கிராம மக்கள் வேதனை

மதுராந்தகம், செப். 26 –மதுராந்தகம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பா.சுகந்தி, அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட தண்ட்ரை, புதுச்சேரி, தண்டலம், மொறப்பாக்கம் புதூர், அபிராமிபுரம், கழினிபாக்கம், கூடலூர், சிந்தாமணி, முனியந்தரங்கள், மாத்தூர், அகிலி, செண்டிவாக்கம், கீழாழர், பாதிரி, வேலாமூர், ராமாபுரம், ரெட்டிபாளையம், சுனைபாறை, அண்ணாநகர், மோக்ல்வாடி, பின்னம்பூண்டி, எலப்பாக்கம், மதூர், காட்டுகரணை, கோட்டகயப்பாக்கம், திம்மாபுரம், திருமுக்காடு, உத்தமூர், சீத்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்களிடம் அவர் வாக்கு சேகரித்த போது, முதியவர்களுக்குக் கருவிழித்திரை புகைப்படம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு வேலை கிடைக்காமல் வாழ்வாதாரத்தை இழப்பதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். நூறுநாள் வேலையில் முழுமையாகக் கணக்கின்றி குறைந்த நாட்களே வேலை வழங்கப்படுவதாகவும், முதியவர்களின் கண்கள் சரியாகப் பதி வாகாததால் சம்பளம் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், நியாயவிலைக் கடைகளிலும் கைரேகை வைக்க முடி யாமல் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி, முழுமையான வேலை நாட்களையும், ரூ. 700 ஊதிய உயர்வையும் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருவதாகவும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் இப்பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் குரல் கொடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

இந்நிகழ்வின்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் சிவக்குமார், ஜி.பிரமிளா, அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.அர்ஜுன்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் க.ஜெயந்தி,வி.திருமலை உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.