தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் களம் காணும் சிபிஎம் வேட்பாளர் ராஜாங்கம்

27 Mar 2026, 3:15 pm
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் களம் காணும் சிபிஎம் வேட்பாளர் ராஜாங்கம்
<p><strong>புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் களம் காணும் சிபிஎம் வேட்பாளர் ராஜாங்கம்</strong></p> <p>புதுச்சேரி வடக்கு திசையில் அமைந்துள்ள தொகுதி லாஸ்பேட் தொகுதியாகும். புதுச்சேரி நகரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தொகுதியில் ஆரம்பத்தில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசித்து வந்தனர். &nbsp;காலப்போக்கில் கைத்தறி தொழில் நலிவடைந்து விட்டது. தற்போது அரசு ஊழியர்கள், கடைகளில் வேலை செய்ப வர்கள்,கூலித்தொழிலாளர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் மாநில அரசின் கலை கல்லூரிகள்,கல்வி நிலையங்கள் அதிகம் உள்ள தொகுதியாகும். இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் &nbsp;14,ஆயிரத்து 1 01 பேரும்,பெண் வாக்காளர்கள் 15 ஆயிரத்து 695 பேரும், இரு பாலினம் ஒருவர் என &nbsp;மொத்தம் 29 ஆயிரத்து 797 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 1964ல் இருந்து 14 முறை நடைபெற்ற தேர்தலில் காங்கி ரஸ், திமுக,அதிமுக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்று வந்துள்ளன. இத்தொகுதியில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பி.சங்கரன் 9738 வாக்கு கள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் உட்பட 11பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர் இரா.ராஜாங்கம் லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பெத்து செட்டிபேட்டை யில் வசித்து வரும் இரா.ராஜாங்கம் வயது 64 , மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.தனது 17வயதில் கைத்தறி தொழிலாளியாக நெசவாளர் சங்கத்தில் சேர்ந்து பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டார்.பின்னர் படிபடியாக மார்க்சிஸ்ட் கட்சியின் பல்வேறு உயர்மட்ட பொறுப்புகளை வகித்து வந்தார்.தற்போது மணைவி பிள்ளை களுடன் பெத்துசெட்டிப்பேட்டையில் வசித்து வருகிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.