தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!

2 Apr 2026, 5:30 am
குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!

குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!

நாகர்கோவில், ஏப். 1- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி குமரி மாவட்ட மக்கள் தலைவர்களாக வாழ்ந்து மறைந்த கம்யூனிஸ்ட் முன்னோடிகளான தோழர்கள் ஜி.எஸ்.மணி, மணி, டி.மணி, ஜே.ஹேமச்சந்திரன், பி.தியாகராஜன், பி.பெருமான் ஆகியோரது நினைவிடங்களில் ஏப்ரல் 1 புதனன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தேர்தல் பிரச்சாரப் பயணத்தை துவக்கினார்.

புதனன்று காலை மார்தாண்டம் அருகில் வேட்டுமணி நினைவிடங்களில் தோழர்கள் ஜி.எஸ்.மணி, டி.மணி நினைவிடங்களில் ஆர்.செல்லசுவாமி மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து செங்கோவிலில் உள்ள தோழர் பி.தியாகராஜன் நினைவிடத்திலும் திரு வட்டார் அருகில் மாத்தூரில் உள்ள தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவிடத்திலும், தாமரைகுளத்தில் பி.பெருமான் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

அவருடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், என்.எஸ்.கண்ணன், பி.விஜயமோகனன், எம்.அகமது உசேன், கே.தங்கமோகன், வி.அனந்தசேகர், என்.ரெஜினிகுமார், ஆர்.ரவி, மூத்த தோழர் கே.மாதவன் மற்றும் வட்டாரச் செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

செவ்வாயன்று சென்னையில் இருந்து திரும்பிய ஆர்.செல்லசுவாமி, அமைச்சர் மனோ தங்கராஜ் அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். அதைத் தொடர்ந்து புன்னையடி திருவட்டார் ஒன்றியத் துணைச் செயலாளர் ஆர்.டி.கலைகிரி, குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜோஸ், வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், மோகன்ராஜ், ஸ்டான்லி, ஸ்டீபன் மற்றும் பல்வேறு இடங்களில் திமுக தலைவர்கள் ஆர்.செல்லசுவாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.