சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்குச்சேகரிப்பு பிரச்சாரப் பயணம்
11 Apr 2026, 5:30 am

சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்குச்சேகரிப்பு பிரச்சாரப் பயணம்

நாகர்கோவில், ஏப்.10- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஓட்டு சேகரிக்கும் வாகன சுற்றப்பயணத்தை ஏப்ரல் 10 வெள்ளியன்று தொடங்கினார்.

வேட்பாளருடன் இருந்து கூட்டணி கட்சி கட்சியினருடன் இணைந்து அமைச்சர் த.மனோ தங்கராஜ் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். கல்லியங்காடு பகுதியில் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு சால்வை அணிவித்து பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வெள்ளியன்று மாலை பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புலியூர் குறிச்சியில் ஆர்.செல்லசுவாமி பரப்புரை மற்றும் வாக்காளர் நேரடி சந்திப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஆர்.சி. தேவாலயத்தின் பாதிரியார் இயேசு ரத்தினத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.