பேரூராட்சிகள், ஊராட்சிகளில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்குச் சேகரிப்பு
12 Apr 2026, 5:30 am

பேரூராட்சிகள், ஊராட்சிகளில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்குச் சேகரிப்பு

நாகர்கோவில், ஏப். 11- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர். செல்லசுவாமி திருவட்டார், ஆற்றூர், பேரூராட்சிகள் மற்றும் ஏற்றக்கோடு, குமரன்குடி ஊராட்சி பகுதிகளில் ஏப்ரல் 11 சனிக்கிழமையன்று மக்களை நேரடியாக சந்தித்து வாக்குச் சேகரித்தார். கூட்டணி கட்சியினரும் பொதுமக்களும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

திருவட்டார் அருகே கழுவன் திட்டையில் ஆர்.செல்லசுவாமியின் வாக்குச்சேகரிப்பு பயணத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மூத்த தலைவருமான டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் துவக்கி வைத்தார். ஆற்றூர் பேரூராட்சி தலைவர் பினா அமிர்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஆர். லீமாரோஸ் முன்னிலை வகித்தனர். திமுக சார்பில் ஆற்றூர் பேரூராட்சி துணைத் தலைவர் தங்கவேல், பேரூர் செயலாளர் சோமராஜன், காங்கிரஸ் கட்சி பேரூர் தலைவர் வீரஜின், நிர்வாகி ஜெபா, தேமுதிக ஆற்றூர் தலைவர் ஷாஜி, சிபிஎம் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜேந்திரன், பி.பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தங்கமோகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வில்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேமனூர், ஆற்றூர் சந்திப்பு, மாத்தூர், ஏற்றக்கோடு, ஆலையடி, அணக்கரை, திருவட்டார், சாருர், திருவரம்பு, கொப்பிலவி, கேசவபுரம், புலியிறங்கி, புத்தனடை, புளிச்சியால்விளை உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட மையங்களில் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்தார். திருவட்டார் காவல் நிலையம் அருகில் நிறைவடைந்தது. அனைத்து மையங்களிலும் வேட்பாளர் வருகையை எதிர்பார்த்து காத்திருந்து வரவேற்றளித்தனர்.

தடயமங்கலம் ஊராட்சி செம்மண் விளை பகுதியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாரோஸ் தலைமையில் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரித்தனர். தக்கலை பேருந்து நிலையம், மெயின்ரோடு, பாரதிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளியன்று சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்குச்சேகரித்தார். திமுக, சிபிஐ மற்றும் கூட்டணிக்கட்சியினர் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.