தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்குச்சேகரிப்பு

10 Apr 2026, 5:30 am
பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்குச்சேகரிப்பு

பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்குச்சேகரிப்பு

நாகர்கோவில், ஏப். 9- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர், இளைஞர்கள் வரவேற்பு, வாழ்த்துக்களைக் கூறி ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

பேச்சிப்பாறை பகுதியில் வியாழனன்று வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி, பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசையை சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி சந்தித்தார்.

கோதநல்லூர், கல்குறிச்சி ஆகிய பகுதிகளில் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆதரவாக கூட்டணிக்கட்சியினர் கலந்துகொண்ட ஊர்வலங்கள் நடைபெற்றது. திருவிதாங்கோடு, தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.