தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி! தேர்தல் பிரச்சாரப் பயணம் துவங்கியது : உற்சாக வரவேற்பு

1 Apr 2026, 4:02 pm
குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!  தேர்தல் பிரச்சாரப் பயணம் துவங்கியது : உற்சாக வரவேற்பு
<p><strong>குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி! &nbsp;தேர்தல் பிரச்சாரப் பயணம் துவங்கியது : உற்சாக வரவேற்பு</strong></p> <p>நாகர்கோவில், ஏப். 1- மதச்சார்பற்ற முற்போ க்கு கூட்டணியின் பத்மநாப புரம் தொகுதி சிபிஎம் வேட்பா ளர் ஆர்.செல்லசுவாமி குமரி மாவட்ட மக்கள் தலை வர்களாக வாழ்ந்து மறைந்த கம்யூனிஸ்ட் முன்னோடிக ளான தோழர்கள் ஜி.எஸ். மணி, டி.மணி, ஜே.ஹேமச் சந்திரன், பி.திவாகரன், பி.பெருமாள் ஆகியோரது நினைவிடங்களில் ஏப்ரல் 1 புதனன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலு த்தி, தேர்தல் பிரச்சாரப் பய ணத்தை துவக்கினார். புதனன்று காலை மார்த் தாண்டம் அருகில் &nbsp;வேட்டு மணியில் அமைந்துள்ள தோழர்கள் ஜி.எஸ்.மணி, டி.மணி நினைவிடங்களில் ஆர்.செல்லசுவாமி மலர் மாலை வைத்து மரியாதை &nbsp;செலுத்தினார். அதைத் தொடர்ந்து செறுகோலில் உள்ள தோழர் பி.திவாகரன் நினைவிடத்திலும் திரு வட்டார் அருகில் மாத்தூரில் உள்ள தோழர் ஜே,ஹேமச் சந்திரன் நினைவிடத்திலும், தாமரைகுளத்தில் பி.பெரு மாள் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். அவருடன் கடசியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், என்.எஸ்.கண்ணன், பி. விஜயமோகனன், எம்.அகமது உசேன், கே.தங்க மோகன், வி.அனந்தசேகர், என்.ரெஜீஸ்குமார், ஆர்.ரவி, மூத்த தோழர் கே.மாத வன் மற்றும் வட்டாரச் செய லாளர்கள் உள்பட ஏராள மானோர் பங்கேற்றனர். திமுகவினர் &nbsp;உற்சாக வரவேற்பு செவ்வாயன்று சென் னையிலிருந்து திரும்பிய ஆர்.செல்லசுவாமி, அமைச்சர் த.மனோ தங்க ராஜை அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். அதைத் தொ டர்ந்து புதனன்று திருவட்டார் &nbsp;ஒன்றியத் துணைச் செய லாளர் ஆர்.டி.கலைகிரி, குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் &nbsp;ஜோஸ், &nbsp;வழக்கறிஞர்கள் ராஜேந்தி ரராஜ், மோகன்ராஜ், ஸ்டான்லி, ஸ்டீபன் மற்றும் பல்வேறு இடங்களில் திமுக தலைவர்கள் ஆர்.செல்ல சுவாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். &nbsp; சிஎஸ்ஐ கன்னியாகுமரி பேராயர் எஸ் .கிறிஸ்டோபர் விஜயன், சுவாமிதோப்பு தலைமை பதி மகா குரு &nbsp;பால பிரஜாதிபதி அடிகளார் ஆகியோர் பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்வசுவாமிக்கு &nbsp;வாழ்த்துகளை தெரி வித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.